அதிசயிக்க வைக்கும் நீல நிற எரிமலை.. காரணம் என்ன?

0

எரிமலை என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது வல்கனோ என்ற திரைப்படம்  லாகி எரிமலைத் தொடர் வெடித்த போதும், தம்போரா எரிமலை தொடர் வெடித்த போதும்  ஏற்பட்ட சேதங்கள் மனித வரலாற்றில் மறக்க முடியாதவை. 

அதிசயிக்க வைக்கும் நீல நிற எரிமலை
இத்தனை சேதங்களை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த எரிமலைகள் வளிமண்டலத்தை தூசு மயமாக்கி  சூரியனை மறைக்கும் அளவுக்கு  பல கிலோ மீட்டர் உயரத்திற்கு  புகையைக்  கக்குகிறது. 

அப்படி அது  புகை கக்கும் பொழுது  அதிலிருந்து வெளிப்படும் எரிமலை குழம்பு  அடர் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில்  வெடித்து சிதறி  எரிமலையை சுற்றி  பாய்ந்து ஓடும்  இந்த எரிமலை குழம்பினை தான்  லாவா என்று சொல்வார்கள் . 

ஆனால் இந்தோனேசியாவில்  ஜாவா தீவின்  கிழக்கு முனையில் உள்ளது kawah   ljen எரிமலை.இந்த  kawah ljen  எரிமலையில் இருந்து வெளிவரும்  லாவா மட்டும்  நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது . 

இது நீல நிறத்தில் காட்சி அளிப்பது மிகவும்  ஆச்சரியத்தை  ஏற்படுத்துகிறது . இதனை காண்பதற்காகவே சுற்றுலாப்  பயணிகள் இங்கு வருகின்றனர் . 

இப்படி நீல நிறத்தில் காணப்படுவதற்கான காரணம்  இந்த லாவாவின் நிறமானது  அந்த எரிமலை இருக்கும் கனிமங்களின்  கலவையின் அடிப்படையில்  ஒவ்வொரு இடத்திற்கும்  சில வேறுபாடு இருக்கும் . 

கணையம் பாதிக்கப்படுவது எப்படி?

இப்படி எரிமலை  வெடித்து சிதறும்  போது வெளிவரும் லாவா உடன் சேர்ந்து  மிக அதிக  அழுத்தம் மற்றும் உயர் வெப்பநிலையில்  சல்பர் என்ற வாய்வுக்கள்  வெளிப்படுவதன் காரணமாக  இந்த லாவா நீல  நிறமாக காட்சியளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  

(kawah ljen) கவாஜென் எரிமலை

எரிமலை விரிசல் இருந்து வெளியேறும்  லாவா விலுள்ள  கந்தகம்  அதாவது சல்பர்    வாய்வு  ஆக்சிஜன்  நிறைந்த காற்றோடு  வினை புரியும் பொழுது  அது எரிந்து வரும் தீப்பிழம்புகள்  நீலநிறத்தில்  இருக்கும்  இந்த தீப்பிழம்புகள்  சுமார் 16 அடி  அதாவது 5 மீட்டர் உயரத்திற்கு  எழும்பி  காட்சியளிக்கிறது .

கிரானைட் தயாராவது எப்படி? 

நாம் வல்கனோ திரைப்படத்தில் பார்த்திருப்போம். அந்தப் படத்தில் வெடித்து சிதறும் எரிமலை குழம்பானது  அடர் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அந்த  லாவா  உருகி  ஓடும் பொழுது  நெருப்புக் குழம்பாக காட்சியளிக்கும். 

மரியானா பள்ளம்

ஆனால் இந்த எரிமலையில்  அதிகப்படியான  திரவ  சல்பர்  ஆக்சிஜனுடன்  வினைபுரிந்து தொடர்ந்து எரிந்து  மேலிருந்து கீழ்நோக்கி பாறை சரிவுகளில்  பாயும் பொழுது பார்ப்பதற்கு நீலநிறத்தில் கண்கொள்ளாக் காட்சியாக அமைகிறது . 

சல்பியூரிக் பாறை

இந்த நீல நிற  லாவா பாயும் போது பகலை விட  இரவு நேரங்களில்  தெளிவாக தெரியும். இப்படி இருந்த சல்ஃபர் ஆனது லாவாவுடன் இணைந்து  குழம்பாக ஓடி வரும் பொழுது  அது குளிர்ந்து  சல்பியூரிக் பாறையாக  படிந்து விடுகிறது. 

ஆனால் இந்த சல்பர்  குறைந்த உருகும் வெப்பநிலை கொண்டது.  அதாவது 239 டிகிரி  பாரன்ஹீட் (120 டிகிரி செல்சியஸ் )  வெப்ப நிலையில் இருக்கக்கூடியது. 

ஆனால் இந்த வெப்பநிலையை விட எரிமலையின் உச்சியில் வெப்பம் அதிகமாகத்தான் இருக்கும். மேலும் (kawah ljen) கவாஜென் எரிமலையின் உச்சியில்  மிகப்பெரிய (Kawah Ijen Acid Lake)  கவாஜென் அமில ஏரி உள்ளது. 

இதன் தண்ணீர் பச்சை நிறத்தில் இருக்கும். இந்த அமில ஏரியின் அமிலத்தன்மை ஆனது  pH 0.5  வை விட  குறைவு என்று சொல்லப்படுகிறது. 

மேலும் எரிமலை வெளியேற்றிய ஹைட்ரஜன் குளோரைடு வாய்வு தண்ணீருடன் வினைபுரிந்து அதிக அளவில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உருவாக்கியிருக்கும் என்றும்,

இதனால் அந்த தண்ணீரானது பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 

Stunning blue volcano
இந்த அரிய நிகழ்வினை புகைப்படம் எடுத்த பிரஞ்சு புகைப்படக்காரர் ஆலிவியர் க்ரன்வால்டு  இந்த அடர்த்தியான வாயுக்கள் வெளிவரும் பொழுது  நம்முடைய கண்களுக்கு எதுவுமே தெரியாது என்றும், 

அவரது முதல் பயணத்தின் போது ஒரு கேமரா மற்றும் 2 லென்சுகள்  இந்த அமிலத்தால் சிதைந்துள்ளன என்றும், மேலும் அவர்கள் வீடு திரும்பிய பிறகு  அவரின்  உடம்பிலிருந்து  சல்பர் வாய்வின் வாசனை  நீங்க 3 வாரங்கள் ஆனது என்றும்  தெரிவித்துள்ளார்.  

இந்த சல்பர் அதாவது  கந்தகம் ஆனது   ஒரு சுவையற்ற தனிமம் ஆகும்.  இது அழுகிய மனம் கொண்டது. இது இயற்கையில் தனிமமாகவும் பல தனிமங்ளோடு சேர்வதால்  சல்பைடு  மற்றும்  சல்ஃபேட்  கனிமங்கள் ஆக கிடைக்கிறது. 

இது நீரில் கரைவதில்லை என்றாலும்  கார்பன் டை  செல்ஃபை டில்  கரைகிறது. இதை சூடு படுத்தினால் தங்கம் பிளாட்டினம் மற்றும்  இரிடியம்  தவிர பிற உலோகங்களுடன் இணைகிறது.  

இதனுடைய பயன் அதிகமாக இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள்  அந்த சல்ஃபுரிக் பாறைகளை வெட்டி எடுத்து  விற்பனை செய்கின்றனர். இது  ஒரு கிலோ சுமார்  680 இந்தோனேஷிய ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

இப்படி இவர்கள் இந்த பாறைகளை வெட்டி எடுக்கும் பொழுது வாயு முகமூடிகள் கூட அணியாமல்  மலை உச்சி வரை நடந்தே சென்று  எடுத்து வருகின்றனர்..  

ஆனால் எப்படி இருந்தாலும் இந்த பூமியில் அதிசயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த உலகில் இப்படியெல்லாம் ஒரு அதிசயம் இருக்கின்றனவா என்று  நமக்கு தோன்றுகிறது. இறைவனின் படைப்பல்லவா !

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings