சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வேண்டும் - விஜய் தேவரகொண்டா !

0

சுதா கொங்கரா படத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா மறுத்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுதா கொங்கரா (Sudha Kongara) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட பெண் இயக்குநராவார். 

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வேண்டும்
திரைக்கதை ஆசிரியராக தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரைத்துறையிலும், இந்தித் திரைப்பட உலகிலும் நன்கு அறியப்பட்டவர். 

இவர் அமைத்த திரைக்கதை இந்திய ஆங்கிலப் படமான மித்ர், மை ஃபிரண்ட் ( Mitr, My Friend) அந்த ஆண்டின் சிறந்த ஆங்கிலப் படத்திற்கான விருதாக 49ஆவது தேசியத் திரைப்பட விருதைப் பெற்றது.

சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வெளியாகவிருந்த இப்படம், தியேட்டர் பணி நிறுத்தம் காரணத்தால் அமேசான் ஆன்லைன் ப்ரைம் வீடியோ என்ற ஓடிடி தளத்தில் 2020 நவம்பர் 12ல் வெளியானது. 

ஏர் டெக்கான்" நிறுவனத்தின் அதிபரான திரு.ஜி.ஆர்.கோபிநாத்தின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றது. 

சூர்யாவின் நடிப்பை அடுத்து சுதா கொங்கராவின் இயக்கம் தான் அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி? 

சுதா கொங்கரா இயக்குனராக அறிமுகமான இறுதிச் சுற்று படத்திலே தனது முத்திரையைப் பதித்து விட்டார் சுதா கொங்கரா. தற்போது சூரரைப் போற்று படத்தின் மூலம் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டார்.

இந்த நிலையில் இந்த படத்தை பார்த்து விட்டு நடிகர் விஜய் தேவரகொண்டா படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமில்லாமல், சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.  ஆனால் தற்போது சுதா கொங்கரா படத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா மறுத்து விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சுதா கொங்கரா தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்காக அந்தாலஜி படம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அதில் நடிக்க விஜய் தேவரகொண்டாவை அணுகியதாகவும், ஆனால் அந்தக் கதை பிடிக்காததால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்த விஜய் தேவரகொண்டா தற்போது அந்த வாய்ப்பை நிராகரித்ததாகக் கூறப்படுவது அதிர்ச்சியளித்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings