இனி ரயில் நிலையங்களிலும் மண் குவளையில் தேநீர் அமைச்சர் பியூஷ் கோயல் !

0

சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இனி ரயில் நிலையங்களிலும் மண் குவளையில் தேநீர்
அதற்கு மாற்றாக பேப்பர், மண் போன்வற்றால் உருவாக்கப்பட்ட எளிதில் அழியக்கூடியப் பொருட்களைப் பயன்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் காரணமாக நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் குவளைகளுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மண் குவளையில் தேநீர் விற்பனை செய்யப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்மயமாக்கப்பட்ட திகாவாரா-பண்டிகுயி பிரிவு ரயில் வழித்தட தொடக்க நிகழ்ச்சி திகாவாரா ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

34 கி.மீ. தொலைவு கொண்ட இந்த மின் வழித்தடத்தில் ரயிலை கொடியசைத்து தொடங்க ிவைத்து அமைச்சர் பியூஷ் கோயல் பேசியது:

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் என்ற இடத்தில் பேசிய அவர், தற்போது 400 ரயில் நிலையங்களில் மண் குவளைகள் மூலம் தேநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறதாகக் குறிப்பிட்டார். 

வருங்காலத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் தேநீரை மண் குவளையில் விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறோம். 

பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை நோக்கிய ரயில்வே துறையின் பங்களிப்பாக இந்த நடவடிக்கை அமையும். மண் குவளை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும். இதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

இது பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை நோக்கி ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார். மண்குவளை தேநீர் விற்பனை மூலம் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings