வாரிசு நடிகையான ராதிகா, தனது தந்தை, அண்ணன்களைத் தொடர்ந்து சினிமாவில் கால் பதித்தவர்.
80-களில் கதாநாயகியாகக் கலக்கிய இவர் திருமணத்திற்குப் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்து வருகிறார்.
இவருடைய முதல் திருமணம், மணமான சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவதாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹென்றி என்பவரை திருமணம் செய்து கொண்டு, சில ஆண்டுகள் வாழ்ந்தார்.
அவருக்குப் பிறந்த மகள் தான் ரேயான் ஹென்றி (His only daughter was Ryan Henry.). பின்னர் ராதிகா இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்று தனிமையில் தனது மகளுடன் வாழ்ந்து வந்தார்.
அதனையடுத்து ஒரு சில ஆண்டுகள் கழித்து நடிகர் சரத்குமாரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்... இது பலரும் அறிந்த விஷயம் (This is something that many people know.).
ஆனால் ராதிகாவைப் பற்றி தெரிந்த பலருக்கும் அவருடைய மகள் ரேயான் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ரேயான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை என்றாலும், பட்டப் படிப்பைப் பயின்றது வெளிநாட்டில் தான். ரேயான் இது நாள் வரை ஒரு முறை கூட திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ராதிகாவிடம் கூறியதே இல்லையாம்.
அவர் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் எப்போதாவது ராதிகாவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் செல்வாராம்.
மேலும் தனது 15 வயதிலேயே ராதிகா நடத்தி வந்த ராடான் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பார்க்க துவங்கிய ரேயான், தற்போது அந்த முழு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார் (She currently manages the entire company.).
இது வரையிலும் அவருடைய நிறுவனத்தில் பணிபுரியும் யாரிடமும் கோபமாகவோ அல்லது கண்டிப்புடனோ அவர் நடந்துகொண்டதே இல்லையாம்.
அதே போலவே எக்கச்சக்க வசதிகள் இருந்தும் கூட தன்னை எப்போதும் மிகவும் சாதாரணமாக இருக்கும் ஒரு பெண்ணாகத் தான் அனைவரிடத்திலும் வெளிப்படுத்திக் கொள்வாராம்.
இவர் முதன் முதலில் மிகுந்த தயக்கத்துடன் ராதிகாவிடம் வெளிப்படுத்திய விஷயம் இவருடைய காதல் பற்றித்தானாம்.
முதலில் மக்களின் இந்தக் காதல் பற்றி நிறைய யோசித்த ராதிகா பின் தன் மகளின் சந்தோஷத்திற்காகவும், அவர் முடிவு என்றுமே நல்லதாகத் தான் இருக்கும் என்பதாலும் திருமணத்திற்கு ஓகே என்று பச்சை கோடி காட்டி விட்டாராம்.
ராதிகா அவருடைய வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்திருந்தாலும் கூட அவரது மகள், திருமணம் வரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து, காதலித்தவரையே முறைப்படி திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது (It is noteworthy that the man who married the lover.).
Thanks for Your Comments