நிவர் புயலால் பெட்ரோல் பங்க் வழக்கம் போல் இயங்குமா?

0

வங்கக் கடலில் அதிவேகப் புயலாக உருவெடுத்துள்ள நிவர் புயல் நாகை மாவட்டத்தில் கரையைக் கடக்கவே வாய்ப்பு அதிகம் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

நிவர் புயலல் பெட்ரோல் பங்க்குகள்
நிவர் புயல் நாளை (நவ. 25) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது (The Indian Meteorological Department has announced).

இந்த நிலையில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே உள்ள பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழகம் மற்றும் புதுவை மாநில அரசுகள் இணைந்து செய்து வருகின்றன.

புயலின் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் ஒவ்வொரு ஊராட்சி அளவிலும் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் (People living in low-lying areas are being taken to safer places). 

அத்தியாவசியப் பொருட்களைப் பொதுமக்கள் தயாராகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளும்படியும், இரண்டு நாட்களுக்கு யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், 

மரங்களின் கிளைகளை வெட்டி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் படியும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது (Instructed to the public by loudspeaker).

மேலும் இந்த புயலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும் வகையில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நாளை புயல் கரையை கடக்க உள்ளதை அடுத்து பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் (Because the government is on holiday) ஏற்கனவே முன் கூட்டியே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் நாளை பொது மக்கள் வெளியே வர வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் நாளை வழக்கம் போல் பெட்ரோல் பங்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். 

இது குறித்து பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கூறுகையில் (According to the Petroleum Vendors Association saying), ‘கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் 

நிவர் புயல் கரையை கடக்கும் போது பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது (It has been announced that the sale of petrol and diesel will be suspended.).

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings