அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவன், ஆன்லைனில்👈 கேம் விளையாட, தனது அம்மாவின் ஆப்பிள் அக்கவுண்டில் இருந்து 16 ஆயிரம் டாலர்கள் பயன்படுத்தி உள்ளான். இது இந்திய மதிப்பில் 11 இலட்ச ரூபாய் ஆகும்.
ஜூலை மாதம் ஜான்சன் Add-on பூஸ்டர்கள் மூலம் கேமில் புதிய கதாபாத்திரங்கள் வாங்க பயன்படுத்தியுள்ளார்.
இறால் தயிர் பிரியாணி செய்முறை !
ஜூலை 9ம் தேதி வாக்கில் ஜார்ஜ் ஜான்சன் 2500 டாலர்கள் வரை செலவழித்திருந்தார். ஆரம்பத்தில் ஜெஸிக்கா இது ஏதோ ஆன்லைன் திருட்டு என்று நினைத்திருக்கிறார்.
ஆப்பிள் மற்றும் பே-பால் நிறுவனத்திடம் 👉ரீஃபண்ட் செய்வதற்காக முறையிட்ட போது தான், ஜெஸிக்காவிற்கு உண்மை நிலவரம் புரிய வந்தது.
அக்டோபர் மாதம் தான், எவ்வளவு பணம், எந்தெந்த வகையில், எந்தெந்த விளையாட்டு நிறுவனங்களுக்கு பரிமாற்றம் நடந்துள்ளது என்ற முழு தகவல் கிடைத்தது.
பண பரிமாற்றம் நடந்த 60 நாட்களுக்குள் தங்களை தொடர்பு கொண்டால் தான் பணத்தை திருப்பி அளிக்க முயற்சிகள் எடுக்க முடியும் என பே-பால் நிறுவனம் கூறி விட்டது.
பிராடு செய்யப்பட்டதாக நினைத்து வந்த ஜெஸிக்காவிற்கு, தனது மகனின் திருவிளையாடல்👈 தான் இது என அறியவே அக்டோபர் மாதம் ஆகிவிட்டது.
6 வயது சிறுவன், அதிகமாக ஜெஸிக்காவின் பணத்தை பயன்படுத்தியது, விர்ச்சுவல் கோல்ட் ரிங் வாங்குவதற்கு என அறிய வந்துள்ளது.
ஜெஸிக்கா நடந்ததை எல்லாம் ஜான்சனிடன் கூற, ஜான்சன் கூலாக, நான் உனக்கு திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று கூறி உள்ளான்.
பள்ளியிலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி !
மகன், மொபைலில் ஆன்லைன் கார்ட்டூன் கேம் விளையாடி வருகிறான் என்று நினைத்து வந்த ஜெஸிக்காவிற்கு இது பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. தனது கடன்களை திருப்பி அடைக்க ஜெஸிக்கா சேர்த்து வைத்திருந்த பணம் முழுவதும் தீர்ந்து விட்டது.
தனது மகனுக்கு👈 உண்மையான பணம் குறித்து இருந்த அறியாமை நினைத்தும் ஜெஸிக்கா வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், பிற பெற்றோர்களுக்கு ஜெஸிக்கா இதன் மூலம் மிகப்பெரிய அறிவுரையும் கூறி உள்ளார்.
தங்கள் குழந்தைகள் மொபைல் போன்களை பயன்படுத்துவதை பெருமையாக நினைக்கும் பெற்றோர், உண்மையான வாழ்க்கை என்ன,
போலியான டிஜிட்டல் வாழ்க்கை என்ன என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும், என்பதற்கு ஜெஸிக்கா, ஜான்சனின் வாழ்க்கை ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.
Thanks for Your Comments