அயோத்தியில் கோயிலா மசூதியா என்ற விவாதம் முடிவடைந்து விட்டது. ஆகஸ்ட் 5 அன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையும் செய்யப்பட்டு விட்டது.
மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (சிபிஆர்ஐ) ரூர்க்கி, ஐஐடி மெட்ராஸ் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவற்றின் பொறியாளர்கள் மண்ணை ஆய்வு செய்து கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளதாக ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கூறப்படுகிறது.
கோயிலின் கட்டுமானப் பணிகள் 36 முதல் 40 மாதங்களுக்குள் முடிக்கப்படும். கோயிலின் வரைபடமும் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்றுவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கூட்டம் ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மறுபுறம், மசூதி கட்டும் பணியும் வேகம் பிடித்துள்ளது.
இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு நாளன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளது
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட ஜனவரி 26-ம் தேதியன்று அயோத்தியில் மசூதிக்கு அடிக்கல் நாட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்நோக்கு மருத்துவமனை வளாகம், சமுதாய சமையல் கூடம், நூலகம் உள்ளிட்டவை அடங்கிய இந்த மசூதியின் மாதிரி வரைபடம் டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த மசூதி வட்ட வடிவில், சுமார் 2000 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் கட்டப்பட உள்ளது என்று அறக்கட்டளையின் உறுப்பினர் அக்தர் கூறியுள்ளார்.
Thanks for Your Comments