காலையிலேயே எடப்பாடியாரை தொடர்பு கொண்ட அமித்ஷா !

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிவர் புயல் தாக்கியது, வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கரையைக் கடந்த போது அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி,

எடப்பாடியாரை தொடர்பு கொண்ட அமித்ஷா !
காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 

வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் மட்டும் 67 இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. அப்போது தொலைபேசி வாயிலாக தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரை 

தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புயல் பாதிப்புகளில் இருந்து மீள தேவையான  அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருந்தார். 

குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி? 

தே போல பாதிப்புகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும், தேசிய மீட்பு படையினர் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புரவி புயல் உருவாகி நேற்று இரவு இலங்கையில் 

திரிகோண மலைக்கு வடக்கே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன்படி நேற்று இரவு திருகோணமலை அருகே புயல் கரையை கடந்தது. 

அதனைத் தொடர்ந்து தற்போது பாம்பனுக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புரவி இன்று பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

நேற்று இரவு இலங்கையில் புரவி கரையை கடந்துள்ள நிலையில் பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

காலில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய !
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புரவி புயல் குறித்து விசாரித்ததாக என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, 

அதில் கூறியிருப்பதாவது: 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்களை இன்று காலை மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புரவி  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். 

பின்னர் தமிழ்நாட்டுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings