வலங்கைமான் அடுத்த நீடாமங்கலம் அருகே புதுதேவன்குடியில் முதல்வரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார் .
இதில் ஆர்டிஓ புண்ணியகொட்டி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தலைவர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர் .
சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதா இதனை வரவேற்றார். இந்த மினி கிளினிக்கை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார் .
அந்த சமயத்தில் பிரதீப் என்ற சிறுவனை அவரது தந்தை சிகிச்சைக்காக அங்கே தூக்கி வந்தார் .
இதனைப் பார்த்த அமைச்சர் அந்த சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க செய்து அதன்பின்னர் அந்த சிறுவனை பார்த்து நலம் விசாரித்தார் .
பின்னர் மேல் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்க உத்தரவிட்டார் .
Thanks for Your Comments