மழையால் வரும் இருமலை குணப்படுத்த !

0

சில்லென்ற காற்றை உணரும் போதும், சில்லென்ற மழைச்சாரலை பார்க்கும் போதும் அதில் இணைந்து கொள்ள ஆசை வரவே செய்யும். ஆனால் மழைத்துளி பட்டாலே காய்ச்சல் வந்து விடும் என்ற அச்சத்தில் மழையோடு மகிழ்ச்சியை பகிராமல் இருப்போம். 

மழையால் வரும் இருமலை குணப்படுத்த

அப்படி இருந்தும் காய்ச்சலும் இருமலும் வரவே செய்கிறது. இதற்கு பருவ நிலை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. நமது தொண்டையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் தந்து நம்மை எரிச்சலூட்ட செய்கிறது. 

இருமல் வந்தால் உடல் சரியில்லையென்று தான் நினைக்கிறோம். ஆனால், உடலின் காற்று குழாய்களில் மாசு புகுந்து விட்டால் அதை வெளியேற்றுவதற்காகவே இருமல் வருகிறது. 

வெளியே இருந்து உள்ளே சென்ற பொருள் தொண்டையை விட்டு வெளியே சென்று விட்டால் இருமல் நின்று விடும். ஆனால், தொடர் இருமல், மிகப்பெரிய தொந்தரவாக மாறி விடும். 

இரவு முழுவதும் விழித்திருக்க வைக்கும். ஒத்துக் கொள்ளாத பொருள்கள், மாசு, தூசி, புகை ஆகியவை குளிர் காலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். 

மழையால் வரும் இருமல்

தொண்டையினுள்ளே சுரண்டுவது போன்ற உணர்வு, வலி ஏற்பட்டால் இயற்கையாக வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே அதை சரி செய்யலாம். 

சன்னி லியோனின் ஆணுறை விளம்பரங்கள் - வீடியோ !

மருத்துவரிடம் செல்லாமல் நாமாக மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும் இது சிறந்தது.  

தேன்

தேன்

சளி, இருமலுக்கு தேன் நல்ல மருந்து என்பது அனுபவ மருத்துவமாக நம் முன்னோர் கூறுவதாகும். ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்) கொண்ட தேன், நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படக்கூடியது. 

உடலில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் ஆற்றல் தேனுக்கு இருப்பதால் தொண்டை புண்ணை குணப்படுத்துகிறது. 

தினமும் பிரட் சாப்பிட வேண்டாம் !

எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான நீரில் அல்லது மூலிகை டீயில் 2 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் இருவேளை அருந்தினால் இருமல் குணமாகும். 

உப்பு நீர் 

உப்பு நீர்

உப்பு நீர் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் கால் தேக்கரண்டி அளவு உப்பை கரைத்து அது வாயினுள் நன்றாக படும்படி கொப்பளித்தால் தொண்டை வலி குறைந்து, இருமல் மறையும். 

ஒரு நாளில் இப்படி பலமுறை செய்யலாம். நுரையீரல் மற்றும் மூக்குப் பாதையில் படிந்திருக்கும் கோழையை இது வெளியேற்றும். சிறு பிள்ளைகள் உப்புநீரை விழுங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இஞ்சி டீ

இஞ்சி டீ

இஞ்சி காற்றுக் குழாய்களின் சவ்வுகளை தளர்த்தக்கூடிய குணம் இஞ்சிக்கு உள்ளது. ஆகவே இருமலை அது குறைக்கும். இஞ்சி டீ பருகினால் அல்லது இஞ்சி சாற்றோடு தேன் மற்றும் கறுப்பு மிளகு பொடி கலந்து குடித்தால் இருமல் நிற்கும். 
முகத்தில் உள்ள ரோமங்களை அகற்றுவதற்கு என்ன செய்யலாம்?

அளவுக்கு அதிகமாக இஞ்சி சேர்த்தால் வயிற்றுப் பிரச்னை மற்றும் நெஞ்செரிச்சல் வரக்கூடும். ஆகவே, சிறிதளவு சேர்க்கவும். புதினா டீ தொண்டை பகுதியிலுள்ள நரம்பு முனைகளை மரத்துப்போகச் செய்யும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. 

புதினா டீ 

புதினா டீ

ஒரு நாளில் 2 அல்லது 3 முறை புதினா டீ அருந்தினால் இருமல் சரியாகும். யூகலிப்டஸ் தைலம் யூகலிப்டஸ் தைலம் என்னும் எண்ணெய் சுவாச பாதையை குணமாக்கும். 

தேங்காயெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் யூகலிப்டஸ் தைலத்தை கலந்து மார்பு மற்றும் தொண்டையின் வெளியே தடவலாம். வெந்நீரில் யூகலிப்டஸ் தைலத்தை ஊற்றி ஆவி பிடிக்கலாம்.. 

மஞ்சள் பாலுடன் பூண்டு

மஞ்சள் பாலுடன் பூண்டு

பாலில் மஞ்சள் சேர்க்கும் போது குழந்தைகளும் குடித்து விடுவார்கள். எந்த விதமான நெடியும், வித்தியாச மான வாசனையும் வராது. ஆனால் இந்த மஞ்சள் பாலுடன் பூண்டுப்பல்லைத் தட்டி சேர்த்து வந்தால் நிவாரணம் உடனடியாக கிடைக்கும். 

தொண்டைக்கும் இதமாக இருக்கும். பூண்டின் வாடையை எல்லோரும் விரும்புவதில்லை. அதனால் பூண்டுக்கு மாற்றாக இஞ்சியைத் தோல்நீக்கி மிக்ஸியில் பொடித்து சேர்க்கலாம். 

சற்று காரம் மிக்க இது எரிச்சலான தொண்டைக்கு இதமாக இருக்கும். பொதுவாகவே இருமலால் அவதியுறுபவர்கள் இரவைக் கடப்பது தான் சிரமமாக இருக்கும். 

மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி !

இரவு நேரங்களில் தொடர் இருமலாக இருந்தால் மிதமான வெந்நீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தொண்டை வரை தண்ணீர் சென்று வாய்க்கொப்பளிக்கலாம். இதனால் தொண்டையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வெளியேறும். 

வேலை செய்யும் விதம்

இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் தோஷம், வாதம் மற்றும் பித்தம் மூன்றையும் சம நிலையில் வைக்கிறது. இந்த பானம் தூசி, புகைக் காற்றால் ஏற்படும் இருமலை நீக்க பெரிதும் பயன்படுகி றது. 

கொஞ்சம் ஆங்கிலம்...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings