பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்ததால் தமிழகத்தின் முக்கிய பூக்கள் மலர் சந்தை களான சத்தியமங்கலம் மற்றும் தோவாளையில் ஒரு கிலோ மல்லிகை பூ 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
தற்போது மார்கழி மாத பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்தது.
இதன் காரணமாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகை காலம் என்பதாலும் பூக்களின் விலை அதிகரித்து இன்று மல்லிகைப்பூ கிலோ 3100 ரூபாய்க்கு விற்பனையானது.
உலகமே திரும்பி பார்த்த இடி ஆமீன் என்ற சர்வாதிகாரி !
இதே போல் தன் மாவட்டத்தில் மலர் சந்தைக்கு பிரசித்தி பெற்ற குமரி மாவட்டம் தோவாளையில் மல்லிகை பூவின் விலை 3 ஆயிரத்தைத் தாண்டியது
இன்று காலை மார்க்கெட் துவங்கியதும் 2,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரு சில நிமிடங்களிலேயே 3,000 ரூபாய் என உயர்ந்ததால் சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
Thanks for Your Comments