கல்லீரல் பற்றி அறிந்து கொள்ளுங்கள் !

கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புகள் படியும் ஒருவகை நிலையை கொழுப்பு கல்லீரல் என்றும் கல்லீரல் வீக்கம் என்றும் கூறுவோம். பொதுவாக மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படக்கூடும். 

கல்லீரல் பற்றி அறிந்து கொள்ளுங்கள் !

ஆனால் மதுப்பழக்கம் இல்லாதர்வகளும் இந்த வகை கொழுப்பு கல்லீரல் பாதிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. கல்லீரல் வீக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்படுகிறார்கள். 

இதற்கு மிக முக்கியக் காரணமே வாழ்க்கை முறை மாற்றங்களும் உணவுப் பழக்கங்களும் தான். 

நம்மடைய சருமத்துக்கு அடுத்ததாக, உடலின் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல். வயிற்றின் மேற்புறத்தில், வலது பக்கத்தில், இலை போல் விரிந்திருக்கும் உதர விதானத்துக்குக் கீழே, கால் இல்லாத காளான் வடிவில் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது கல்லீரல்.

ஆங்கிலத்தில் லிவர் என்று அழைக்கப்படும். கிட்டதட்ட ஒன்றரை கிலோ எடையுள்ள கல்லீரல், மார்புக் கூட்டுக்குப் பின்புறம் பத்திரமாக இருக்கிறது. இதயத்தைப் போலவே கல்லீரலிலும் எலும்புகள் கிடையாது.

கல்லீரல்

கல்லீரல்

கல்லீரலைக் கைகளால் தொட்டுப் பார்த்தால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும். மேலோட்டமாகப் பார்க்கின்ற பொழுது ஒரே உறுப்பாக இருந்தாலும் உடல் அமைப்பு ரீதியாக வலப்பக்கம் ஒன்றும் இடப்பக்கம் ஒன்றுமாக இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருக்கிறது. 

இதிலிருந்து தான் 4 அங்குல பித்த நாளம் தொடங்குகிறது. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. 

அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.

விரிவடைந்த கல்லீரல் என்றால் என்ன? 

விரிவடைந்த கல்லீரல் என்றால் என்ன?

ஒரு விரிவடைந்த கல்லீரல் அல்லது ஹெப்பட்டோமெகாலி. கல்லீரலின் அளவு அதிகமாவதால் ஏற்படுகிறது. 

ஒரு சாதரண வைரஸ் தொற்று அல்லது இதய செயலிழப்பு போன்ற கடுமையான மருத்துவ நிலைமைகள் காரணமாக இந்த வீக்கம் ஏற்படுகிறது. வழக்கமாக, அடிப்படை காரணத்தை சரிசெய்தல் ஹெப்பட்டோமெகாலியை சரிசெய்ய உதவுகிறது.

பித்தப்பை

பித்தப்பை

பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. 

கொழுப்பு வகை உணவின் சமிபாட்டுக்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. உணவு உண்டதும், பித்தப்பை சுருங்குகிறது. 

இது கீழ்நோக்கிய படி இறந்து, சிறியதாக வெள்ளிக்காயைப் போன்று சிறிய பித்தப்பையோடும் (Gall bladder), முன்பகுதியில் அடைப்புக்குறி போன்றதொரு சிறு குடலோடும் (Duodenum) கல்லீரலை வந்து பித்தப்பை இணைக்கிறது. 

கல்லீரல் அமைப்பு

கல்லீரல் அமைப்பு

நம்முடைய கல்லீரலைக் குறுக்கு நெடுக்காகப் பிளந்து பார்த்தால், அதற்குள் மிகப்பெரிய ஆச்சர்யம் இருக்கிறது. அதற்குள் ஆயிரக்கணக்கான பல்லாங்குழிகள் போன்று குட்டி குட்டி ‘ஹெப்பாடிக் செல்கள் இருக்கும்.

கல்லீரலில் இருந்து உற்பத்தி ஆகின்ற பித்தநீர், பித்த நாளம் வழியாகப் பித்தப்பைக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து விட்டு, உணவுச் செரிமானத்துக்கு துணை புரிவதற்காக முன் சிறுகுடலுக்குப் போய் சேர்கிறது. 

உடலினுடைய தேவைக்கு ஏற்றபடி, பித்த நீர் சுரக்கும். ஒரு நாளைக்குக் குறைந்தது அரை லிட்டர் (500 மில்லி) வரை பித்த நீரைச் சுரந்து கொண்டு இருக்கிறது. 

இந்த கல்லீரலை ஒரு கெமிக்கல் பாக்டரி என்றே சொல்லலாம். உடலில் நடக்கும் அத்தனை கெமிக்கல் ரியாக்ஷன்களும் அங்கிருந்து தான் நடந்து கொண்டிருந்தது. 

கிட்டதட்ட உலகில் உள்ள அத்தனை விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கினால் கூட இவ்வளவு ஆற்றல் வாய்ந்த நம்முடைய பித்தநீர் போன்று உருவாக்கவே முடியாது.

உடல் வெப்பம்

உடல் வெப்பம்

உடல் உஷ்ணம் என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண வேலைகள் நிகழ்வதற்கும் முக்கிய சக்தியாக உடல் வெப்பம் இருக்கிறது. 

நம்முடைய உடலுக்குத் தேவையான ஒட்டு மொத்த வெப்பமும் இந்த கல்லீரலில் இருந்து தான் உற்பத்தி ஆகிறது. 

அதே போல், ரத்தம் உறைவதற்குத் தேவையான பொருள்களையும் ரத்த நாளங்களுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருள்களையும் இந்த கல்லீரல் தான் உற்பத்தி செய்கிறது.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

நாம் சாப்பிடுகின்ற ஊட்டச்சத்துக்களான, இரும்புச் சத்து, வைட்டமின்கள், வைட்டமின் பி12, வைட்டமின்கள் ஏ ஆகியவற்றைச் சேமித்து வைத்துக் கொள்வது கல்லீரல் தான். 

உடலுக்குள் உண்டாகின்ற நோய்த் தொற்றுதலை எதிர்த்து, போர் புரிகின்ற ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. நம்முடைய உடலுக்குத் தேவையாக ஊக்கமும் செயல்திறனும் கல்லீரல் தான் கொடுக்கிறது.

நம்மால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் பத்து வேலைகள் செய்ய முடியுமா? ஆனால் நம்முடைய கல்லீரல் கிட்டதட்ட ஐந்நூறு வேலைகளுக்கு மேல் செய்கின்ற ஆற்றல் கொண்டது. 

இத்தனை வேலைகளுக்கும் கல்லீரலில் நடக்கின்ற ரசாயன மாற்றங்களைச் செய்கிறது. ஊட்டச்சத்தின் தரத்தை மேம்படுத்துவது, சமநிலையான உணவை பின்பற்றுவது, 

ஒரு நபரின் செயல்பாட்டு அளவு மற்றும். உடல் எடையைப் பொறுத்து சரியான உணவு அளவை உட்கொள்வது போன்றவை Nonalcoholic fatty liver disease (NAFLD) யில் அடங்கும். 

ரத்தத்தில் கொழுப்பு

ரத்தத்தில் கொழுப்பு

நாம் சாப்பிடுகின்ற உணவு இரைப்பையை விட்டு கீழ் இறங்கியதும் பித்தநீர் பித்தப்பையில் இருந்து வெளியேறி, முன் சிறுகுடலுக்கு வந்து விடுகிறது. உணவில் இருக்கின்ற கொழுப்பை பிரிக்கும் செயலை கல்லீரல் செய்கிறது. 

அங்கு வந்து சேரும் கணைய நீரிலிருந்து லைப்பேஸ் என்சைம் வெளியேறுகிறது. நம்முடைய உணவில் உள்ள கொழுப்புச்சத்தை உறிஞ்சி எடுத்து ரத்தத்துக்குக் கொடுக்கிறது.

அரிசி உணவு

அரிசி உணவு

நாம் சாப்பிடுகின்ற அரிசி உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றி, ரத்தத்தில் கலக்கச் செய்வது கல்லீரல் தான். 

அதே சமயம் அரிசி உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட் முழுவதுமாக குளுக்கோஸாக மாறி, ரத்தத்தில் கலந்து விட்டாலும் பேராபத்து தான். 

அதனால் தேவையான அளவுக்கு ரத்தத்துக்குன் குளுக்கோஸைக் கொடுத்து விட்டு மீதியை கிளைக்கோஜனாக மாற்றி தன்னிடம் சேமித்து வைத்துக் கொள்கிறது.

புகை, தூசி

புகை, தூசி

நம்முடைய உடலுக்குள் சென்று சேருகின்ற புகை மற்றும் தூசி ஆகியவற்றைக் கல்லீரல் தான் சுத்தம் செய்கிறது. ரத்த அணுக்களின் ஆயுட்காலம் முடிகின்ற பொழுது, இவை மண்ணீரலுக்கு வரும். 

அப்போது பிலிரூபின் என்னும் நச்சுப்பொருள் வெளிவருகின்றது. இது ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும். நம்முடைய உடலுக்குள் உற்பத்தியாகிற யூரியாவை கல்லீரல் தான் கட்டுக்குள் வைக்கிறது.

ரத்தம் உறைதல்

ரத்தம் உறைதல்

நம்முடைய உடலில் எங்கேயாவது வெட்டுக்காயம் ஏற்பட்டால், ஓரிரு நிமிடங்களில் ரத்தம் வருவது நின்று விடும். 

இதற்குக் காரணம் என்னவென்றால், நம்முடைய கல்லீரல் உற்பத்தி செய்கின்ற புரோத்ராம்பின் என்ற ரசாயனம் தான். இந்த அற்புத வேலையைச் செய்வது கல்லீரல் தான்.

இதயத் துடிப்பு

இதயத் துடிப்பு

நம்முடைய இதயம் துடிப்பதற்குத் தேவையானது ஒருவகையான சக்தி. மூளை வளர்ச்சிக்குத் தேவையான சக்தி ஒன்று. முடி வளர்வதற்குத் தேவையான சக்தி ஒன்று. 

இவை எல்லாவற்றுக்கும் வெவ்வேறு அளவில் சத்துக்கள் தேவைப்படும். அப்படி எந்தெந்த விஷயத்துக்கு எவ்வளவு சத்துக்கள் தேவைப்படுமோ அதற்கு ஏற்றபடி, அந்த உறுப்புக்கு சரியான அளவில் பிரித்துக் கொடுப்பது கல்லீரல் தான்.

Tags:
Privacy and cookie settings