17-ஆம் நூற்றாண்டில் பறக்கும் இயந்திரத்தை வடிவமைக்கும் பணி தொடங்கி விட்டாலும், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து தான் 1903-இல் ரைட் சகோதரர்களால் விமானம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.
விமானம் கண்டுபிடித்து சுமார் 117 ஆண்டுகளைக் கடந்த பின்பும், அதன் வடிவமைப்பு பெரிய அளவுக்கு மாறவில்லை.
எனினும், விமானத்தின் நடுப்பகுதியில் பயணிகள் அமர்ந்து செல்வது தான் தற்போதுள்ள அனைத்து வகையிலான நவீன விமானங்களின் பொதுவான வடிவமைப்பாக உள்ளது.
ஆனால் பல முயற்சிகளில் ஒன்றாக இப்போதைய விமானத்தின் தோற்றத்தை அப்படியே மாற்றி புதிய V-வடிவிலான டிசைன் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது .
இது விமான வடிவமைப்பில் புதிய மைக்கல்லாக பார்க்கப்படுகிறது.பொதுவாக விமானத்தின் இரு இறக்கைகளின் கீழ் காற்று உறிஞ்சும் ராட்சத விசிறிகள் இருக்கும்.
இதை விமானத்தின் நடுவே கொண்டு வந்து இரு இறக்கைகளைப் பெரிதாக்கி புதிய வடிவிலான விமானத்தை உருவாக்கியுள்ளனர். இந்த V-வடிவிலான டிசைன் நெடுதூரம் பயணிக்கும் விமானங்களின் எரிபொருள் செலவை பெருமளவில் குறைக்குமாம்.
இதில் பயணிகள் இருக்கைகள் விமானத்தின் இறக்கைகளில் அமையும். லக்கேஜ் மற்றும் எரிபொருள் டேங்க்குகளும் இதே இடத்தில் தான் இருக்கும்.
இதன் மூலம் கூடுதல் ஏரோடைனமிக்காகவும், சற்றே எடை குறைந்தும் இருக்கும் விமானம். இன்றைய விமானங்களைவிட சுமார் 20% வரை எரிபொருள் சேமிக்க முடியும்.
எனினும், தற்போது பயன்பாட்டில் உள்ள விமானத்தின் இறக்கை அகலமான 65 செ.மீ அளவிலேயே, இந்த புதிய ரக விமானத்தின் இறக்கையும் இருக்கும் என்பது இதனுடைய தனிச்சிறப்பு.
அஜினமோட்டோ பயன்படுத்தினால் ஏற்படும் விபரீதம்?
மேலும், திரவ வடிவிலான ஹைட்ரஜன் அல்லது பேட்டரி மின்சாரத்தை வைத்து ராட்சத விசிறிகளை இயக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் நீண்ட தூரத்துக்கு விமானத்தைத் தொடர்ந்து இயக்கலாம் என்பதால் இந்த வடிவத்தை விமான நிறுவனங்கள் குறி வைத்து ஆராய்ச்சிகளை வேகப்படுத்தியுள்ளன.
நெடுந்தூரப் பயணத்திற்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் 314 பேர் வரை பயணிக்கலாம் என்பது இதனுடைய மற்றொருச் சிறப்பு.
இந்த விமானத்தில் கிட்டத்தட்ட 424 டன் சரக்கு எடுத்துச் செல்ல முடியும் என விமானத்தை வடிவமைத்துள்ள கே.எல்.எம் தகவல் தெரிவித்துள்ளது.
யோகா எப்போது செய்ய வேண்டும்? | Yoga !
மேலும், இந்த விமானத்தின் எஞ்சின் பின்பகுதியில் அமைக்கப்படுகிறது. இதனால் விமானம் ஏற்படுத்தும் சத்தம் குறைவாகவே இருக்கும்.
இதனால் காற்று மாசுபாட்டுடன், ஒலி மாசும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏரோ டைனாமிக் வடிவில் இருக்கும் இந்த விமானத்தின் மாதிரியை 22.5 கிலோ எடையில் டச்சு விமான நிறுவனமான கேஎல்எம் உருவாக்கியுள்ளது. இதன் சோதனை ஓட்டமும் ஜெர்மனியில் உள்ள விமான தளத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதனால் போதிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முழுவதுமாக இந்த 'Flying-V' இயக்கத்திற்கு வர எப்படியும் 2040 ஆகிவிடும்.
வெந்தய டீ குடிச்சா என்ன நன்மைகள் கிடைக்கும்?
நவீன தொழில்நுட்பம், அறிவியலின் மாற்றத்தால் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத விமானங்கள் பயணிகள் சேவையில் ஈடுபடும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Thanks for Your Comments