விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே திருச்சி நெடுஞ்சாலை சாலை ஓரம் அரவிந்த் என்பவர் புதியதாக இன்று பிரியாணி கடையை திறந்தார்.
புதிய கடை திறக்கப்பட்டதால் கடையின் உரிமையாளர் கடையைப் பிரபலமாக்க வேண்டி திறப்பு விழாவை முன்னிட்டு பத்து ரூபாய் நாணயம் கொடுத்தால் பிரியாணி👈 வழங்கப்படும் என விளம்பரப் படுத்தியிருந்தார் .
இதை தொடர்ந்து ஏராளான மக்கள் பத்து ரூபாய் நாணயத்தை கொண்டு வந்து பிரியாணி வாங்கக் கடை முன் குவிந்தனர். இதனால் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்த தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் கடையை மூடச் செய்தனர். அப்போது கடையின் முன் பிரியாணி👈 வாங்கக் குவிந்திருந்தவர்கள் போலீசார் வருவதைக் கண்டதும் ஓடினர்.
அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் உரிய அனுமதி பெறாமலும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள போது அதிகமான மக்களை ஒரே இடத்தில் திரண்டு வரச் செய்ததற்காக அரவிந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து திறக்கப்பட்ட அன்றே கடைக்கு மூடு விழாவும் நடத்தப்பட்டது..
Thanks for Your Comments