ஒரு வழியாக அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். டிச., 31ல் அதற்கான அறிவிப்பும், ஜனவரியில் புதிய கட்சி துவக்கமும் என அதிகாரபூர்வமாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு தனது கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ளார்.
கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில் தேர்தலை சந்திக்க உள்ளார் என்பதால் சூறாவளி சுற்றுப்பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கட்சி தொடங்குவதற்கு முன்பாக தனது அண்ணன் சத்யநாராயணா அவர்களிடம் நேரில் சென்று ஆசி பெற நேற்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்றார் .
இந்நிலையில் நேற்று திடீரென பெங்களூரு சென்ற நடிகர் ரஜினிகாந்த், தனது அண்ணன் சத்யநாராயணாவை சந்தித்து பேசி, அவரிடம் ஆசி பெற்றார். அரசியல் கட்சிக்கு துவங்கும் முன்பாக அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அண்ணனிடம் ஆசி மற்றும் அறிவுரை வாங்கிய ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாளான டிசம்பர் 12 வரை பெங்களூரிலேயே இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது
நரை முடி கருமையாக மீசையில் உள்ள இளநரை போக்க இதை பயன்படுத்துங்கள் !
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் ரஜினிகாந்த் பெங்களூரில் இருந்து சற்று முன் சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளிவந்தது.
இதனையடுத்து அவரது பிறந்த நாளின் போது சென்னையில் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி கட்சி வேலைகள் நிறைய இருப்பதால் இனி நேரத்தை வேஸ்ட் செய்யாமல் உடனடியாக 👉கட்சி குறித்த பணியில் அவர் தீவிரமாக இறங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
Thanks for Your Comments