தன்னை விடுதலை செய்ய சிறைத்துறையிடம் விண்ணப்பித்த சசிகலா !

0

சொத்துக்குவிப்பு வழக்கில் (In the case of hoarding), 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

சிறைத்துறையிடம் விண்ணப்பித்த சசிகலா
டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியானது. டிசம்பர் 3 சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்றும் இதை கர்நாடக சிறை நிர்வாகம் வாய்மொழியாக கூறியுள்ளதாகவும், அவரின் உறவினர்கள், நெருக்கமான நபர்கள் கூறினர். 

மேலும் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாள் வருவதால் அன்றைய தினமும் சசிகலா வெளியே வர வாய்ப்பிருப்பதாகவும், அன்று ஜெயலலிதா சமாதியில் சசிகலா அஞ்சலி செலுத்துவார் என்றும் கூறப்பட்டது. 

ஆனால் இது நாள் வரை சிறை நிர்வாகத்திடம் இருந்து சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் வெளிவரவில்லை. அவர்களின் சிறைக்காலம் ஜனவரி 27ம் தேதியுடன் முடிவடைகிறது (Their prison term ends on January 27.). 

இதனிடையே, கர்நாடக சிறை விதிகளின்படி சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். 

அதன் அடிப்படையில் சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட வேண்டும். 

குற்றவாளிகள் நன்னடத்தை கொண்ட மாதத்திற்கு மூன்று நாட்கள் நிவாரணம் பெற தகுதியுடையவர்கள். நிவாரணம் ஒரு உரிமை அல்ல, ஆனால் சிறை அதிகாரிகளின் விருப்பம் என்பது சிறை விதி. 

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்ட பெண்களுக்கு !

இதனிடையே, சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்தை அவரது வக்கீல்கள் செலுத்தியுள்ளனர். 

வங்கி வரைவோலையை (டிடி ) பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் வக்கீல்கள் சி.முத்துகுமார், ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் செலுத்தினர். 

Sasikala
இந்த நிலையில் சசிகலா பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை அதிகாரிகளிடம் சசிகலா மனு ஒன்றை அளித்துள்ளார். 

அதில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி கர்நாடக சிறைத்துறை அதிகாரியிடம் சசிகலா விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை !

அந்த மனுவை பரப்பனா அக்ரஹாரா மத்திய சிறை அதிகாரிகள், தற்போது அந்த மனுவை கர்நாடக சிறைத்துறைக்கு அனுப்பியுள்ளார்.

இந்த மனு தொடர்பாக சசிகலாவுக்கு இன்னும் எந்த அழைப்பும் விடுக்கவில்லை. விண்ணப்பத்தின் மீது எடுக்கப்படும் முடிவு நிலுவையில் உள்ளது என்று சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பு...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings