கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி !

0

அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது. 

கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி
கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வான நீர்த்தாரை எனப்படும் ‘டோர்னடோ'வை தனது செல்போன் உதவியுடன் புகைப்படம் எடுத்துள்ளார்கள் மீனவர்கள். 

லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர். 

திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியும், கடல் நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்படும் அதிசய காட்சியை அவர்கள் கண்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாக இதனைப் படம் பிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர். 
அடிக்கடி தூக்கம் வந்தால்? எச்சரிக்கை !

மீனவர்கள் மொழியில் இந்த நிகழ்வை ‘யானை தும்பிக்கையை இறக்கி இருக்கிறது' எனச் சொல்வார்களாம்.

ஆனால், அறிவியல் மொழியில் இதனை ‘டோர்னடோ' என பெயரிட்டு அழைக்கிறார்கள். அதாவது தமிழில் நீர்த்தாரை.

பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். 

இந்த விநோத நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதன் வேகம் பல கிலோ மீட்டராக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings