சோதனைச் சாவடிகளில் லட்சக்கணக்கில் பணம் !

1

தமிழகம் முழுவதும் கேரளா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநில எல்லையில் செயல்படும் மோட்டார் வாகன ஆய்வாளர்

சோதனைச் சாவடிகளில் லட்சக்கணக்கில் பணம் !
சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நேற்று (டிச. 12) அதிகாலை ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனைச் சாவடிகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கும் தமிழகத்தில் இருந்து 

பிற மாநிலங்கள் செல்லும் வாகனங்களுக்கு பெர்மிட் வழங்க 200 முதல் 1000 ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதும், 

காவல்துறை சோதனை சாவடியிலும் அதிக பாரத்துடன் வரும் வாகனங்களை அனுமதிக்க 1000 முதல் 5000 வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. 

இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுவதில்லை. 

இந்த நிலையில் நேற்று காலை திடீரென மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள 👉சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர் .

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லையான புளியரையில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வாராத 48,270 ரூபாய் பணம் பறிமுதல். 

மோட்டார் வாகன ஆய்வாளர் நீலவேணி மற்றும் 2 புரோக்கர்கள் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்கையான படந்தால்மூடு 👉சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை டி எஸ் பி மதியழகன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

காட்பாடி தமிழக ஆந்திர எல்லையில் சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.94 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல்.இதில் லஞ்சப்பணம் ரூ.94 ஆயிரத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் 👉சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ. 16 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. 

சோதனைச் சாவடிகளில் லட்சக்கணக்கில் பணம் !

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தையொட்டி அமைந்துள்ள கிறிஸ்டியான் பேட்டை மற்றும் சேர்க்காடு சோதனைச் சாவடிகளில் துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா மேற் பார்வையில், 

காவல் ஆய்வாளர்கள் ரஜினி, விஜய், விஜயலட்சுமி ஆகியோர் அடங்கிய இரண்டு குழுவினர் தனித்தனியாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், கிறிஸ்டியான் பேட்டை 👉சோதனைச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராம் கண்ணன் ஆய்வுப் பணியில் இருந்தார். அவரது மேஜையை ஆய்வு செய்த போது ரூபாய் நோட்டுகள் ஏராளமாக இருந்தன.

மொத்தமாக, எண்ணிப் பார்த்ததில் ரூ.96 ஆயிரம் இருந்தது. அதே போல், சேர்க்காட்டில் மோட்டார் வாகன 👉ஆய்வாளர் ஜெய மேகலா 

என்பவரின் மேஜையை சோதனை யிட்டதில் கணக்கில் வராத பணம் ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் தொடங்கிய சோதனை காலை 9 மணி வரை நீடித்தது.
Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. எங்க இருந்து வருதுன்னு தெரில

    ReplyDelete
Post a Comment
Privacy and cookie settings