விமானத்தின் வேகத்தை அதிகரிக்க முடியுமா?

0

பொதுவாக விமானங்கள் இருவகை: ஒன்று நாம் அதிகம் பயன்படுத்தும் நிலையான பிரிவு (fixed-wing) விமானங்கள். மற்றது ஹெலிகாப்ட்டர் போன்ற ரோட்டரி பிரிவு விமானங்கள்.(rotor-craft). 

விமானத்தின் வேகத்தை அதிகரிக்க முடியுமா?

நிலையான பிரிவு (Fixed-wing) விமானங்களின் பறத்தல் செயல்பாட்டில் பங்கு வகிக்கும் பாகங்களில் இறக்கை (wing), இயந்திரம் (engine), வால் இறக்கைகள் (tail wings) ஆகிய மூன்றும் மிக முக்கியம்.

முதலில் விமான இயந்திரங்களை எடுத்துக் கொள்வோம். இவை ஒரேயொரு செயல்பாட்டைத்தான் செய்கின்றன. அச்செயல்பாடு விமானத்தை முன்நோக்கி அதி விரைவாக தள்ளுவது. 

இந்த இயந்திரங்கள் தமக்கு முன் உள்ள காற்றை உள்ளிழுத்து அதிவிரைவாக (பொறியியல் முறை மூலம் அல்லது இரசயான தாக்குதலின் மூலம்) பின் தள்ளும். 

ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

அதனால் அந்த இயந்திரமும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள விமானமும் மிக வேகமாக முன் தள்ளப்படும். இரண்டாவதாக இறக்கைகளை எடுத்துக் கொள்வோம் (Let’s take the wings second.). 

விமானத்தின் வேகம்

இறக்கைகள் விமானத்தை புவியீர்ப்புக்கு எதிராக மேல் எழுப்புவதற்கு மட்டுமே பயன்படுகின்றன. இயற்கையின் இரகசியங்களில் ஒன்றை அறிந்த போதே மனிதன் விமானங்களில் பறக்க ஆரம்பித்தான். 

பொதுவாக வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் பயணிகள் விமானங்கள் அதிக பட்சமாக மேக் 0.85 என்ற வேகத்தில் பறக்கின்றன. இது பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை பார்க்கலாம். 

விமான தொழில்நுட்பம் நாளுக்கு நாள் புதுமைகளை பெற்று வந்தாலும், அதன் வேகம் மட்டும் கடந்த நான்கு தசாப்தங்களாக மாறவில்லை. தொழில்நுட்ப புரட்சி யுகமாக கருதப்படும்.

இவ்வேளையில், விமானத்தின் வேகம் மட்டும் அதிகரிக்கப்படாமல் இருப்பது பலருக்கும் ஏமாற்றம் தரும் விஷயம் தான். ஆனால், அதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன (There are many reasons behind that.). 

SOEED OF AIRCRAFT

விமான வகை, வானிலை, பூகோள ரீதியில் நில அமைப்பை பொறுத்து விமானத்தின் வேகம் நிர்ணயிக்கப் படுகிறது. ஒரு விமானம் புறப்படுவதற்கு முன்னரே, அதன் வேகம் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. 

அதே நேரத்தில், வானிலை மாற்றத்தை பொறுத்து விமானத்தின் வேகத்தில் மாற்றம் செய்யப்படும். பெரும்பாலான விமானங்கள் மேக் 0.8 முதல் மேக் 0.85 என்ற வேகத்திற்குள் சராசரி வேகமாக கொண்டு பறக்கின்றன. 

அதாவது, ஒலியின் வேகத்திற்குள்ளாகவே பயணிக்கின்றன. போர் விமானங்கள் மட்டுமே ஒலியின் வேகத்தை தாண்டி பறக்க அனுமதிக்கப் படுகிறது. 

நெத்திலி மீன் ரெட் கிரேவி செய்வது எப்படி?

கன்கார்டு விமானம் மணிக்கு 2,499 கிமீ வேகத்தில் பறந்து சாதனை புரிந்தது. ஆனால், அதனை இயக்குவதற்கான செலவீனம், விபத்து அபாயம் உள்ளிட்டவை அதன் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

Can be increase aircraft speed

மேலும், விமானம் பறக்கும் உயரத்தின் திறனை கொண்டும் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு 10,000 அடி உயரம் வரையில் பறக்கும் வான் பகுதியை க்ளாஸ் பி என்று குறிப்பிடுகின்றனர். 

இந்த பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 463 கிமீ வேகம் வரை மட்டுமே பறக்க அனுமதி உண்டு. இதே போன்று, உயரம் மற்றும் குடியிருப்பு, கடல் உள்ளிட்டவற்றை பொறுத்து வான்பகுதி வகைப்படுத்தப்பட்டு, வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. 

ஆனால், பெரிய வகையிலான பயணிகள் விமானங்கள் 38,000 அடி அல்லது அதற்கு மேலும் பறக்கின்றன. ஒலியின் வேகத்தை பயணிகள் விமானம் தாண்டும் போது அதன் எரிபொருள் சிக்கனம் வெகுவாக குறையும். 

வேகத்தை அதிகரிக்க முடியுமா?

இதனால், கட்டணம் இருமடங்காக நிர்ணயிக்கும் நிலை ஏற்படும். கன்கார்டு விமானம் சேவையிலிருந்து விலக்கப்பட்டதற்கு, அபரிமிதமான எரிபொருள் செலவும் முக்கிய காரணம். 

அடுத்து, விமான நிலையங்கள், குடியிருப்பு பகுதிகளில் பறக்கும் விமானங்களுக்கு வேக வரம்பு உண்டு. மணிக்கு 1,235 கிமீ வேகத்தை விமானம் தாண்டும் போது 'சோனிக் பூம்' எனப்படும் அலாதி ஒலியை எழுப்பும். 

விமான நிலையங்கள் உள்ள பகுதிகளில் பல விமானங்கள் வந்து, செல்லும் பகுதியில் அதிக பட்சமாக 463 கிமீ வேகம் வரையில் மட்டுமே பறக்க அனுமதிக்கப்படும். 

மிகபெரிய சாம்ராஜியத்தை ஆளும் ரத்தன் டாடா மனதில் பூத்த காதல் !

விமானங்களின் வேகத்தை அதிகரித்தால் அதிக அதிர்வுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்படும். 

எந்தவொரு நவீன ரக விமானமும் திறன் வாய்ந்ததாக மேம்படுத்தப்பட்டு இருந்தாலும், அதன் வேகம் அதிக பட்சமாக மணிக்கு 950 கிமீ வேகம் என்ற அளவில் தான் இருக்கின்றன. 

சோனிக் விமானம்

விமானத்தின் வேகத்தை அதிகரிக்க தொழில்நுட்பத்தில் பல்வேறு சிக்கல்களை கடந்து ஒரு சில மணி நேரத்தை மிச்சப்படுத்தினாலும், கட்டணம் என்பது மிக மிக அதிகமாக இருக்கும். 

இது நிச்சயம் விமான போக்குவரத்து சேவை துறையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எனவே தான், பல தசாப்தங்களை கடந்தாலும் வேகத்தை அதிகரிக்க வல்லுனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

இருப்பினும், சூப்பர்சானிக் பயணிகள் விமானங்களை தயாரிக்கும் பணிகளும் ஒருபுறம் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை பயன்பாட்டுக்கு வரும் போது எந்தளவு நடைமுறையில் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings