பேஸ்மேக்கர் கருவியின் வகைகளும் செயல்படும் விதமும் !

0

இதயத் துடிப்பு குறைந்தவர்களுக்கு (For those with low heart rate), இதயத்தைச் செயற்கை முறையில் தூண்டி (Artificially stimulate the heart), மீண்டும் அதைச் சீராகத் துடிக்கச் செய்யும் கருவிக்கு ‘செயற்கை இதய முடுக்கி’ (Artificial Pacemaker) என்று பெயர். 

பேஸ்மேக்கர் கருவியின் வகைகளும் செயல்படும் விதமும் !

இதயத்தில் மின்கணு செய்யும் வேலையை இது செய்கிறது. குறைத் துடிப்பு உள்ளிட்ட துடிப்புத் தடைகளுக்கு அடிப்படை காரணங்களை சரிசெய்ய முதலில் சிகிச்சை தரப்படும். 

இதில் பிரச்னை சரியாகவில்லை என்றால் நிரந்தரமாகத் தீர்வு காண ‘பேஸ்மேக்கர்’ கருவி (Pacemaker) பயன்படுத்தப் படுகிறது. இது பார்ப்பதற்கு ஒரு தீப்பெட்டி போலிருக்கும். 

எடை 30 கிராம். பேட்டரியில் இயங்கும் இக்கருவியில் இரண்டு பகுதிகள் உள்ளன. 1. மின்விசையைத் தரும் பகுதி 2. மின் இணைப்பு வயர். மின்விசையை உற்பத்தி செய்யும் பகுதியில் ஒரு பேட்டரி இருக்கும். 

இது மின் தூண்டல்களை ஏற்படுத்தும் (This can cause electrical impulses). இதிலிருந்து மின் இணைப்பு வயர் ஒன்று அல்லது இரண்டு கிளம்பும். இக்கருவியை நோயாளியின், 

தேவைக்கேற்ப தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் உடலில் பொருத்தப்படும் (Fitted into the body temporarily and permanently as needed.).

பயனாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மார்பில் இடது அல்லது 

வலது காரை எலும்புக்கு (Clavicle) அருகில், அதிக ஆழம் இல்லாதவாறு இதைப் புதைத்து, மேற்தோலைத் தையல்போட்டு மூடி விடுகின்றனர். 

இதயத்துக்குச் செல்லும் கழுத்துப் பெருஞ்சிரை (Carotid vein) ரத்தக் குழாய் வழியாக இதன் மின்கம்பிகளை இதய அறைகளுக்குள் கொண்டு சென்று பொருத்தி விடுகின்றனர்.

இது ஒரு கடிகாரத்தைப் போல் இயங்கிக் கொண்டிருக்கும். இதில் இதயம் எத்தனை முறை 👉துடிக்க வேண்டும் என்று நிரல் எழுதப்பட்டிருக்கும். 

அதற்கேற்ப மின் தூண்டல்களை உருவாக்கி இதயத்துக்கு அனுப்புகிறது. அதனால் இதயம் தூண்டப்பட்டு துடிப்பு சீராகி விடுகிறது. 

இதில் உள்ள மின்கலத்தின் ஆயுள் காலத்தைப் பொறுத்து குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தற்காலிக பேஸ்மேக்கர்

பேஸ்மேக்கர் கருவியின் வகைகளும் செயல்படும் விதமும் !

இந்த கருவி உடலின் வெளிப்பக்கத்தில் இருக்கும். அதிலிருந்து புறப்படும் மின் இணைப்பு வயரை கழுத்துச் சிரைக்குழாய் (Carotid Vein) வழியாகவோ, 

தொடைச் சிரைக்குழாய் (Femoral Vein) வழியாகவோ இதயத்துக்குச் செலுத்துவார்கள். கருவியிலிருந்து புறப்படும் மின்தூண்டல் இதயத் துடிப்பை சரிப்படுத்தும்.

நிரந்தர பேஸ்மேக்கர்

பேஸ்மேக்கர் கருவியின் வகைகளும் செயல்படும் விதமும் !

இக்கருவியை மார்பின் மேற்புறத்தில், காரை எலும்பிற்கு (Clavicle) அருகில், சிறிய 👉அறுவை சிகிச்சை செய்து, சருமத்துக்கு அடியில், அதிக ஆழம் இல்லாதபடி புதைத்து, தோலைத் தையல் போட்டு  மூடி விடுவார்கள். 

மின்இணைப்பு வயரைக்   கழுத்துச் சிரைக்குழாய் வழியாக இதயத்துக்குள் செலுத்தி, இதயத்தசைகளின் மீது நன்றாகப் படும்படி இணைப்பார்கள். பேஸ்மேக்கர் ஒரு கடிகாரத்தைப் போல் இயங்குகிறது. 

இதில் இதயம் எத்தனை முறைத் 👉துடிக்க வேண்டும் என முறைப்படுத்தப் பட்டிருக்கும். கருவி இயங்கத்  தொடங்கியதும், குறிப்பிட்ட இடைவெளியில் மின்தூண்டல்கள் கிளம்பி இதயத்தை அடையும். 

இதனால் இதயம் துடிக்கும். பேஸ் மேக்கரிலிருந்து மின்தூண்டல் குறிப்பிட்ட அளவில் இதயத்துக்குச் சென்று கொண்டே இருப்பதால் இதயம் தொடர்ந்து துடிக்கிறது. 

👉நோயாளியின் தேவைக்கேற்ப இதயத் துடிப்பின் வேகத்தை வெளியிலிருந்தே மாற்றியமைக்கவும் இக்கருவியில் வசதியுள்ளது.

இதன் மூலம் நோயாளிக்கு இதயத் துடிப்புத் தடை எப்போதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். 

பேஸ்மேக்கர் கருவி செயல்படும் விதமும் !

இயல்பாகவே, கைக்குழந்தைகளுக்கு இதயத் துடிப்பின் எண்ணிக்கை நிமிடத்துக்கு 100 முதல் 120 வரை இருக்கும். புகை பிடிப்பவர்களுக்கும், கடின உழைப்பின் போதும், ஓடுதல், உயரம் தாண்டுதல், 

விளையாடுதல் போன்ற கடுமையான 👉உடற்பயிற்சிகளின் போதும், அச்சம், பதற்றம், கோபம், கவலை, மன அழுத்தம், உணர்ச்சிவசப் படுதல் போன்ற உளவியல் காரணங்களாலும் இதயத் துடிப்பின் எண்ணிக்கை இயல்பாகவே அதிகரித்து விடும்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்

ஒரு முறை பொருத்தப்படும் இக்கருவி குறைந்தது 10 ஆண்டுகளுக்கு நல்ல நிலைமையில் இயங்கும். அதற்குப் பிறகு புதிய கருவியைப் பொருத்திக் கொள்ள வேண்டும். 

இப்போது வயரில்லாத பேஸ்மேக்கர் கருவி வந்துள்ளது. நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படாமலே இது பொருத்தப் படுவதால் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கொஞ்சம் ஆங்கிலம்...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings