நம் முகத்தில் அமைந்த, காற்று நிறைந்த வெற்று துவாரங்கள்.. இந்த துவாரங்களின் உட்புற சுவர்களில் சீத சவ்வுகள் (Mucous membranes) நிறைந்திருக்கும்.
இந்த சீதசவ்வுகள் தான் சளியை உற்பத்தி செய்கின்றன. இந்த சீத சவ்வுகளில், எரிச்சலோ, நோய் தொற்றோ உண்டாகும் போது, அதிகப் படியான சளியை உற்பத்தி செய்ய ஆரம்பித்து விடுகிறது.
அவ்வாறு உற்பத்தி ஆகும் அதிகப் படியான சளி, அந்த வெற்று துவாரங்களை, கட்டி சளியால் நிரப்பி விடுகின்றது! எவ்வெவற்றால் இந்த சீத சவ்வுகளில் எரிச்சல் உண்டாகிறது என்பதை அடுத்து பார்க்கலாம்…
1) பாக்டீரியா நோய் தொற்று (Bacterial Infections)
2) வைரஸ் நோய் தொற்று (Viral infection)
3) ஒவ்வாமை (Allergy )
4) சுவாசகாசம் (Asthma )
5) சைனஸ் நோய் தொற்று (Sinus infection)
உங்கள் சைனஸ் துவாரங்களை அதிகப்படியான சளி அடைத்து கொள்வதால் மேலும் பல சிக்கல்களும் ஏற்படக்கூடும்..
1) சளி தொண்டையில் இறங்குதல் ( Post Nasal Drip) உண்டாகும். அதனால், தொண்டையில் புண், இருமல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும் .
2) அதிக சளியால், காதுகள் அடைத்து, காது நோய்தாக்கம் உண்டாகலாம்!அதிகப்படியான சளி உற்பத்தியால் ஏற்படும் தொந்தரவுகளை எப்படி தடுக்கலாம் என்று அடுத்து பார்க்கலாம்..
துபாயில் 17 பேர் பலியாகக் காரணமான டிரைவர் நாடு கடத்தல் !
1) தூசியால் அல்லது ஒவ்வாமையால் உங்கள் மூக்கு தண்ணீராய் ஒழுக ஆரம்பிக்கும் போது ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மருந்தை(Anti Histamines) பரிந்துரை செய்வார்கள்.
இந்த ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து, நம் மூக்கின் உள்ளே வீங்கிய திசுக்களை சரி செய்து, மூக்கு ஒழுகுதலை நிறுத்தி விடுகிறது!
எந்த உணவை ஃபிரிட்ஜில் வைக்கலாம்?
2) அதிகப்படியான சளி உற்பத்தியால், மூக்கடைத்து கொள்ளும் போது மூக்கடைப்பு நீக்க மருந்து ( Decongestants ) பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த மருந்து, நம் நாசியில் வீங்கி இருக்கும் இரத்த நாளங்களை குறுக செய்கிறது.
அதனால், அந்த நாளங்களுக்கு செல்லும் இரத்தம் குறைகிறது… அவ்வாறு இரத்த ஓட்டம் குறைய குறைய, அதிகப்படியான சளி குறைந்து , மூக்கடைப்பும் நீங்கி விடுகிறது!
3) தொண்டையில் சளி இறங்குதல் பிரச்சனை (Post Nasal Drip) இருக்கும் போது, கபத்தை வெளிக்கொணர உதவும் மருந்தை (Expectorant ) பரிந்துரைப்பர்.
கட்டி சளி என்றால் என்ன?
இது கட்டி சளியை, மெல்லிய சளியாக மாற்றி விடும் இயல்புடையது.. அவ்வாறு மெல்லியதாக மாறும் சளியை, ஆவி (Steam ) பிடித்து சுலபமாக நம் உடம்பை விட்டு வெளியேற்றி விடலாம்!
வேகமாக கொழுப்பை கரைக்க இண்டர்வெல் டிரெயினிங் !
அதிகப் படியான சளியால், இருமல், தொண்டை புண் என்று அவதிப்படும் போது, அது எதனால் வந்தது, பாக்டீரியாவாலா இல்லை ஒவ்வாமையாலா என்று ஆராய்ந்து அறிந்து ,
அதற்கு தக்க, மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்! அந்த மருந்துகள், சளியை உற்பத்தி செய்யும், திசுக்களின் வீக்கங்களை குறைத்து, சளியை கட்டுக்குள் கொண்டு வந்து விடும்!
கட்டி சளி என்றால் என்னவென்று இப்பொழுது பார்த்து விடலாம்.. அதிகப் படியான சளியால், சைனஸில் பிரச்சனை ஏற்பட்டு அவதிப்படும் போது, தொண்டையில் சளி இறங்குதல் பிரச்சனை உண்டாகும் .
அச்சமயம், தொண்டை புண், இருமல் உண்டாகும் என ஏற்கனவே பார்த்திருந்தோம்.. இதற்கு முக்கிய காரணம் இந்த தொண்டையில் கட்டி கொள்ளும் கட்டி சளி தான் காரணம்! சளி தண்ணீர் இல்லாமல் காய்ந்து கட்டி ஆகி விடுகின்றது.
சென்னை பிராட்வேயிலுள்ள ஒய்எம்சிஏ - (YMCA) கட்டடம் அறிய !
சில சமயம் நாம் எடுத்து கொள்ளும் மருந்துகள், சளியை காய்ந்து போக செய்கின்றன! இது போன்று சளி காய்ந்து, நம்மை பாடாக படுத்துவதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்!
2) அதிகப் படியான சளியால் அவதியுறும் போது, குளிரூட்டப்பட்ட அறையிலோ, வெப்ப மூட்டப்பட்ட அறையிலோ இருப்பதை தவிர்க்க வேண்டும்.
வாய் அதிகம் வறட்சியடைவதற்கு காரணம் தெரியுமா?
3) அதிகப் படியான தண்ணீரை குடிக்க வேண்டும்.
4) நம் உடம்பில் உள்ள தண்ணீரை வற்றி போகச் செய்யும் பானங்களான, காபி, தேநீர், மதுபானம் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
5) கட்டி சளியால் அவதியுறும் போது, சளியை உலர்ந்து போக செய்யும் மருந்துகள் எடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அது பிரச்னையை இன்னும் தீவிரம் ஆக்கி விடும்.
அதாவது, மூக்கடைப்பு தீர்க்க உதவும் மருந்தையோ (Decongestants) அல்லது ஒவ்வாமை எதிர்ப்பு மருந்தையோ (Anti Histamine), இச்சமயங்களில் உட்கொள்ள கூடாது.
கபத்தை வெளிக்கொணர உதவி புரியும் மருந்து (Expectorant) தான் இந்த நேரங்களில் உட்கொள்வது பிரச்னையை தீர்க்க உதவும்!
கடைசியாக நெஞ்சு சளி (Phelgm) என்றால் என்னவென்று பார்த்து விடுவோம்! இந்த நெஞ்சு சளிக்கும், நம் மூக்கில், சைனஸில் உற்பத்தியாகும் சளிக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது .
இது வேறு, அது வேறு! மூச்சு குழாய் அழற்சி (Bronchitis), கபவாதம் (Pneumonia ) போன்ற நோய் தாக்கத்தால், இருமல் அறிகுறி ஏற்படும் போது தான் இந்த நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்!
சதுப்பு நிலக் காடுகள் இல்லை என்றால் என்னாகும்?
இந்த நெஞ்சு சளியின் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தை வைத்து என்ன மாதிரி நோய் தொற்று என்பதை கணித்து விட முடியும்!
இந்த நெஞ்சு சளியில், இரத்தம் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது! இந்த சளி என்பது நம் உடம்புக்கு மிக இன்றியமையாத ஒன்று.
இந்த சளியானது சமநிலை தவறி அளவுக்கு அதிகமாக சுரந்து விடும் போது, அதை சமாளிக்க கற்று கொண்டால், அது சகஜமான நிலைக்கு திரும்பும் வரை சற்று ஆறுதல் அளிக்கும்!
Thanks for Your Comments