உடலில் நச்சு அதிகரிப்பதன் மூலம், ஒட்டு மொத்த உடலின் செயற்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே, உடலில் நச்சுக்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நமது உடலில் இருக்கும் வெப்பம் அதிகமானாலும் குறைந்தாலும் அது பாதிப்பாகவே கருதப்படும். பாரம்பரிய மருத்துவ முறைகளான 👉ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவ முறைகள் இந்த உடல் சூட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.
இது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஆனாலும், உடல் சூடு வழக்கத்தை விட அதிகரிப்பது சில அறிகுறிகளின் வழியாகத் தெரிய வரும். அதன் தொடர்ச்சியாக, சில பாதிப்புகள் நம் தினசரி இயக்கத்தையே பாதிக்கும்.
உடலில் நச்சு அதிகரிக்கும் போது 👉கல்லீரலின் செயல்பாடு கடினமாக ஆரம்பிக்கும். இதன் விளைவாக உடலில் சூடு அதிகரிக்க ஆரம்பிக்கும். உடல் உஷ்ணம் என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று.
நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கும், ஜீரண👈 வேலைகள் நிகழ்வதற்கும் முக்கிய சக்தியாக உடல் வெப்பம் இருக்கிறது.
அதே நேரத்தில் வெப்பம் அதிகமானால் பல்வேறு நோய்களை நமக்கு தந்து விடும். எனவே, நம்முடைய உடல் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
உடற்சூடு அதிகரித்தால் கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற சாதாரண சில அறிகுறிகள் தென்படும். அப்போதே நாம் அதை கவனித்து அதை சரி செய்து கொள்ள வேண்டும்.
நம்முடைய உடல் வாதம், 👉பித்தம், கபம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் 1: ½ : ¼ (அதாவது வாதம் முழுபங்கும், பித்தம் அரை பங்கும், கபம் கால் பங்கும்) இருக்க வேண்டும்.
இதில் பித்தம் அதிகரிக்கும் போது உடற்சூடு பிரச்சனை வரும். இதற்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் பின்பற்றும் வாழ்வியல் முறையும் உட்கொள்ளும் உணவுகளும் தான்.
உடற்சூடு ஏற்படுத்தும் பாதிப்புகள்
மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், 👉தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரக எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
உடற்சூட்டை பொறுத்தளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், மாதவிலக்கு நாட்களின் போது பெண்களுக்கு உடல் சூடு அதிகரிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், மாதவிலக்கு👈 நாட்களின் உடற்சூடு பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையை உண்டு பண்ணும்.
சாப்பிட கூடாதது
மீன், கருவாடு, கத்தரிக்காய், புளித்த 👉தயிர், வினிகர், ஊறுகாய் போன்ற உணவுகளும் நம்முடைய உடற்சூட்டை அதிகரிக்கச் செய்யும். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் உடலின் வெப்பநிலை அதிகமாகிறது.
சாப்பிட கூடியது
உடற்சூடு பிரச்சனை வராமல் இருப்பதற்கு வெள்ளரிக்காய், முள்ளங்கி, வெண்பூசணி, இளநீர், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவுப்பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
கீரை வகைகளில் மணத்தக்காளி, 👉பொன்னாங்கன்னி போன்ற உணவுகள் சிறந்தவை. அதே போல வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டு வருவதன் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கலாம்.
எவ்வாறு தடுக்கலாம்?
தூக்கமின்மை ஒருவரிடம் இருந்தாலே 👉உடல் சூடும் தானாக அதிகமாகும். மொபைலை நோண்டிக் கொண்டே இருப்பது, காலநேரம் பார்க்காமல் டிவியே கதியென்று இருப்பது, இருக்குமிடத்தை விட்டு சில நொடிகள் கூட அசையாமல் பணியாற்றுவது போன்றவை உடல் சூட்டுக்குக் காரணம்.
தயிரை விடுத்து மோர் பயன்படுத்த வேண்டும். நீராகாரம், நீர்ச்சத்து மிக்க சைவ உணவுகள், உடற்பயிற்சி, தியானம், 3 லிட்டர் 👉தண்ணீர், 7 மணி நேரத் தூக்கம் போன்றவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
துரித உணவுகள், சிகரெட், மது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல், அதீத 👉உடலுறவு கூடாது என்கின்றன பாரம்பரிய மருத்துவ முறைகள்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கத்தை முடிந்த வரை பின்பற்ற வேண்டும். நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய் வேண்டாம் என்றால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
வேறு வழியே இல்லையென்றால், ஆயுர்வேத மருத்துவம் அளிக்கும் அப்யங்கம் எனும் மூலிகை எண்ணெய்க் குளியலை நாடலாம்.
உடலைச் சுத்தப்படுத்தும் சிகிச்சைகளையும் செய்யலாம். உடல் சூட்டை இயல்பாக வைத்துக் கொண்டால், 👉ஆரோக்கியம் நம்மோடு இருக்கும்!
என்ன காரணம்?
அளவுக்கு அதிகமாகக் கண் விழித்து, உடலை வருத்தி வேலை செய்வதாலும் இது போன்று நிகழ்வதுண்டு. சில நேரங்களில் இது தலைமுடி உதிர்வையும் ஏற்படுத்தும். உடலில் வீக்கங்களை உருவாக்கும்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் உட்காரும் இடம் தகிப்பதன் காரணமும் இது தான். இதனால் தான், அக்காலத்தில் பெண்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கத்தைப் பின்பற்றுகின்றனர்.
ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள் உடல் சூடு அதிகமாவதால் புற்றுநோய் உள்ளிட்ட சில நோய் பாதிப்பு ஏற்படுமென்று வலியுறுத்துகின்றனர். அலோபதி மருத்துவம் இதனை ஏற்பதில்லை.
மறக்கபட்டு வரும் நட்சத்திர உழைப்பாளி !
புற்றுநோய் கட்டிகள் ஏற்படும் இடங்களில் வெப்பநிலை உயர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, வெப்பம் அதிகமுள்ள இடங்களில் இந்நிலை ஏற்படலாம் என்கின்றனர் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பின்பற்றுபவர்கள்.
Thanks for Your Comments