கர்ப்ப காலத்தில் அனுஷ்கா செய்த சிரசாசனம்.. இப்டிலாமா பேமஸ் ஆகனும் !

1

இந்தி திரையுலகில் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மா. இவருக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

கர்ப்ப காலத்தில் அனுஷ்கா செய்த சிரசாசனம்

தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார். வரும் 2021 ஜனவரியில், தங்களுக்கு குழந்தை பிறக்குமென கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் கூறியிருந்தனர். 

குழந்தை பிறக்கும் நேரம் மனைவி அருகில் இருந்து கவனித்து கொள்வதற்காக அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் தொடரில் மட்டும் விளையாடி விட்டு நாடு திரும்ப உள்ளார். 

இந்த நிலையில், கர்ப்பகாலத்தில் அனுஷ்கா ஷர்மா தலைகீழாக நின்று சிரஸாசனம் செய்யும் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். அது சிறிது காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படமாகும். 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அப்புகைப்படத்தை பகிர்ந்துள்ள அனுஷ்கா ஷர்மா,  இந்த பயிற்சி மிகவும் கடினமான ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் "யோகா எனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, நான் கர்ப்பகாலத்திற்கு முன்பு செய்த சில ஆசனங்களை தவிர்த்து விட்டு, பல வருடங்களாக செய்து வரும் இந்த சிரஸாசனத்தை, தற்போது செய்துள்ளேன். 

பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியம் விலகியது !

எனது கணவர், கூடுதல் பாதுகாப்பிற்காக நான் பேலன்ஸ் செய்ய துணை புரிகிறார். இந்த பயிற்சி எனது யோகா குருவின் வீடியோ மூலம் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. 

கர்ப்ப காலத்தில் அனுஷ்கா செய்த சிரசாசனம்..

இந்த கர்ப்பகாலத்திலும், நான் பயிற்சியை தொடர்வதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்" என கூறியுள்ளார்.

இதற்காக ரசிகர்கள் அவரை பாராட்டி வந்தாலும், கர்ப்ப காலத்தில் இது போன்ற ஆபத்தான பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம் என அவருக்கு பல்வேறு தரப்பினர் கணடனம் குவிந்து வருகிறது.  

நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !

கர்ப்பகாலத்தில் டாக்டரும், யோகா மாஸ்டரும் அருகில் இல்லாதபோது, இது மாதிரியான பயிற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். 

இது போன்ற பயிற்சிகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அது குழந்தையை பாதித்து விடும் என பலரும் அவருக்கு கண்டனமும், அறிவுரையும் கூறி வருகின்றனர். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. இதுலாம் தேவையா உனக்கு

    ReplyDelete
Post a Comment
Privacy and cookie settings