பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ரோட்டா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ் !
தண்டனை காலம் முடிவடைந்து, வரும் 27ல், அவர் விடுதலை செய்யப்பட உள்ளதாக, சிறை நிர்வாகம், சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அவருக்கு சிறைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இரவில் மீண்டும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு செய்முறை !
காய்ச்சல் இருந்ததால், கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன. எனினும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை சசிகலாவுக்கு தைராய்டு, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனையால் பாதிகப்பட்டுள்ளதால்
கால்சியம் குறைபாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள?
சசிகலா தற்போது விக்டோரியா மருத்துவமனையில் உள்ள ஐசியுவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவருக்கு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Thanks for Your Comments