உலகம் முழுவதும் அண்டார்டிகா தவிர்த்து நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கும் ஓர் உயிரினமான கரப்பான் பூச்சி பற்றி சில தகவல்கள்.
கரப்பான் பூச்சிகள் அணு வெடிப்பால் சாகாதா? சாகும் என்ன கொஞ்சம் கால தாமதமாக சாகும் ஏனென்றால் நம்மை விட 10 மடங்கு அதிகமாக அணு கதிர்வீச்சை தாங்கக்கூடியது.
இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது?
இவை 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை உலகின் சில இடங்களில் 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதை படிவங்கள் (Fossils ) கண்டுபிடிக்க பட்டுள்ளது.
இவைகள் வெளியிடும் ஒரு வகையான புரதம் ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
மேலும் அசுத்தமான இடங்களில் இருந்து வரும் இவை பாக்டீரியாக்களை சுமந்து வருவதால் அவை நம் உணவு பண்டங்களின் படும் போது பல்வேறு நோய்களை உண்டாக்குகின்றன.
ஏன் சோளம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க கூடாது?
தலை இல்லாமல் ஒரு கரப்பான் பூச்சி அதிக பட்சம் ஒரு வாரம் வரை உயிர் வாழும் ஏனென்றால் இதன் நரம்பு மண்டலம் மிக எளிமையானது உடல் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு
ஒவ்வொரு பகுதியிலும் அதை கட்டு படுத்தும் நரம்பணுத்திரள்கள் (Neurons ) உள்ளன அவை அதன் வழியே சுவாசித்து உயிர் வாழ்ந்தாலும் தண்ணீர் குடிக்க முடியாமல் ஒரு வாரத்தில் நீரிழப்பால் இறந்து விடும்.
கரப்பான் பூச்சிகள் தேவை பட்டால் சுவாசிக்காமல் 40 நிமிடங்கள் வரை இருக்க முடியும் மேலும் இவைகளால் தண்ணீருக்கடியில் 30 நிமிடங்கள் வரை உயிர் வாழும் என அறியவில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவை சில மாதங்கள் முதல் அதிகபட்சம் இரண்டு வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன.
குளிர்ச்சியான இரத்த வகையை சேர்ந்த இவைகளால் உணவில்லாமல் ஒரு மாதம் வரை உயிர் வாழ முடியம் ஆனால் ஒரு வாரம் வரை மட்டுமே தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியும்.
இவைகளால் ஒரு மணி நேரத்திற்கு மூன்று கிலோ மீட்டர் வரை செல்ல முடியும் இதன் மூலம் இவை வீடு முழுவதும் அசுத்தங்களை பரப்புகின்றன.
உலகெங்கிலும் 4000 வகையான கரப்பான் பூச்சிகள் வசிக்கின்றன. அமெரிக்காவில் வாழும் சில வகை கரப்பான் பூச்சிகளுக்கு பீர் மிகவும் இஷ்டமாம்.
இவைகள் பல்வேறு பூச்சி தடுப்பு மருந்துகளால் அழிக்க முடியும் .
ஆனால் இவற்றின் குஞ்சுகள், முட்டைகள் மருந்து செல்ல முடியாத இண்டு, இடுக்குகளில் இருப்பதால் மீண்டும், மீண்டும் வருகின்றன எனவே இவற்றை முழுமையாக அழிப்பது கஷ்டம்தான்.
நாம் அருவருப்பாக பார்க்கும் இந்த கரப்பான் பூச்சி புரதம் நிரம்பிய ஒரு உணவாக சீனர்களால் உண்ண படுகிறது.
Thanks for Your Comments