தேனி அருகே இறந்தவருக்கு பால் தெளிக்கும் சடங்கு செய்வதற்காக மயானத்திற்கு சென்றவர்களை தேனீக்கள் தாக்கியுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அதனைத் தொடர்ந்து நேற்று அவரது உடல் கோடாங்கிபட்டியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இறந்த சீதாலட்சுமிக்கு பால் தெளிக்கும் சடங்கு செய்வதற்காக இன்று காலை உறவினர்கள் மயானத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது மயானத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்து படையெடுத்த ராட்சத தேனீக்கள் அங்கிருந்தவர்களை தாக்கியது. தேனீக்கள் தாக்கியதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC) செய்வது
தேனீக்கள் படையெடுத்ததன் காரணமாக அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடத் துவங்கினர்.
இதில் காயமடைந்த அனைவரையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
சனிக்கிழமை இறந்தவருக்கு சடங்கு சம்பிரதாயம் செய்ய சென்றவர்களை இன்று தேனீக்கள் தாக்கியதால், ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thanks for Your Comments