கண்ணில் லென்ஸ் பழுதாகி ‘கேடராக்ட்’ வந்து விட்டால், அந்த லென்சை எடுத்து விட்டு செயற்கை லென்சைப் பொருத்தி பார்வையை மீட்க முடியும்.
முழங்கால் மூட்டு தேய்ந்து விட்டால், உலோகத்தால் ஆன செயற்கை மூட்டைப் பொருத்தி, முழங்கால் வலியைக் குறைக்க முடியும்.
இதே போல் இதயம் பழுதாகி விட்டால், அதற்குப் பதிலாகச் செயற்கை இதயத்தைப் பொருத்த முடியுமா? ‘முடியும்’ என்று நிரூபித்து வருகிறது நவீன மருத்துவம்!
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை களும் செயற்கை உறுப்புகளைப் பொருத்தும் முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவற்றின் உச்சகட்ட வளர்ச்சியாக, இதயம் செயலிழந்து, இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர் களுக்கு மாற்று இதயம் கிடைக்கும் வரை உயிரைப் ‘பிடித்து’ வைக்க செயற்கை இதயத்தைப் பொருத்தும் அறுவை சிகிச்சையும் தற்போது பிரசித்தமாகி வருகிறது.
இவற்றின் உச்சகட்ட வளர்ச்சியாக, இதயம் செயலிழந்து, இதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர் களுக்கு மாற்று இதயம் கிடைக்கும் வரை உயிரைப் ‘பிடித்து’ வைக்க செயற்கை இதயத்தைப் பொருத்தும் அறுவை சிகிச்சையும் தற்போது பிரசித்தமாகி வருகிறது.
இதய நோயை தடுக்க தக்காளி ஜூஸ் !சமீபத்தில் பிரான்சில் ‘கார்மட்’ எனும் உயிரி மருந்தியல் துறை நிறுவனம் புதிய செயற்கை இதயத்தை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளது.
மாரடைப்பு வந்தவரின் இதயத்தில் எல்லா தமனி ரத்தக் குழாய்களும் அடைபட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் சிகிச்சை எதுவும் பலனளிக்காமல் போனால், அவருக்குச் செயற்கை இதயத்தைப் பொருத்தலாம்.
இதயத்தின் கீழறைகள் இரண்டும் மிகவும் பாதிக்கப்பட்டு, மகா தமனிக் குள்ளும், நுரையீரல் தமனிக் குள்ளும் ரத்தத்தைச் செலுத்த முடியாத அளவுக்கு இதயம் செயலிழந்து போனாலும் இதைப் பொருத்தலாம்.
இதய இடைச் சுவர்களில் துளை விழுந்து அல்லது இதயத்தில் உள்ள எல்லா வால்வுகளும் பழுதடைந்து, இதயம் பலூன்போல் விரிந்து விட்டால் செயற்கை இதயம் பயன்படும்.
இப்படிப் பலருக்கும் பயன் தருகின்ற செயற்கை இதயத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி 50 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது.
அமெரிக்காவி லுள்ள ஹூஸ்டன் மருத்துவமனை ஆராய்ச்சி யாளர்கள் தான் இதில் முன்னோடிகள்.
இந்த மையத்தைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவர் 1982ல் வடிவமைத்த ‘ஜார்விக் 7’ (Jarvik7) எனும் செயற்கை இதயம், மருத்துவ உலகில் மிகவும் பிரபலம். இது பாலியுரேத்தேன் எனும் பிளாஸ்டிக்கால் உருவாக்கப் பட்டது.
ஒரு நெல்லிக்காய் அளவு பேட்டரியில் இயங்குகின்ற ‘ஜார்விக் 7’ கருவியை நோயாளி யின் பழுதடைந்த இதயத்தோடு பொருத்தி விடுகிறார்கள்.
இதில் 2 பலூன்கள் இதயத்தை ஒட்டி யிருக்கும். ஒரு சிறிய குழாய் மூலம் பலூனுக்குள் காற்று செல்கிறது. அக்காற்று தருகின்ற அழுத்தத்தில் பலூன்கள் விரிந்து சுருங்கும் போது இதயமும் இயங்குகிறது.
பேட்டரி சார்ஜ் குறைந்து போன காரை 4 பேர் பின்பக்கத்தி லிருந்து தள்ளி விட்டு நகரச் செய்வதைப் போலத்தான் இதுவும். இதைப் பயன்படுத்துவதில் பல சிரமங்கள் இருந்தன.
இதன் பேட்டரி இணைந்த கருவி ஒரு பெரிய கேமரா அளவிற்கு இருக்கும். இதை இடுப்பில் எந்நேரமும் சுமந்து கொண்டிருப்பது நோயாளி களுக்குச் சிரமத்தைத் தந்தது.
இது காற்றைச் செலுத்தும் போது ரத்தம் உறைந்து போனது. இது தருகின்ற காற்றழுத்தம் நுரையீரல்களின் செயல்பாட்டைத் தடுத்தது.
இதன் செயற்கை வேதிப்பொருள் களை உடல் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தது. எல்லா வற்றுக்கும் மேலாக, இது அதிக பட்சமாக 6 மாதங்களே செயல்பட்டது.
ஆகையால், இதைவிட சிறந்த கருவியைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சி யாளர்கள் முடுக்கி விடப்பட்டனர். இதன் பலனாக போனிக்ஸ்7 (Phoenix7), அபியோகோர் (AbioCor), சின்கார்டியா (SynCardia) என்று பல செயற்கை இதயங்கள் செயலுக்கு வந்தன.
இவை டைட்டானியம் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப் பட்டவை. இதயத்தின் வெளிப்பக்கத்தி லிருந்து ‘ஜார்விக்7’ இயங்கியது என்றால், இவை நோயாளியின் இதயத்துக் குள்ளேயே பொருத்தப்பட்டு செயல்பட்டன.
பழுதடைந்து போன இதயத்தின் இரண்டு கீழறை களையும் 4 வால்வு களையும் அகற்றி விட்டு, அந்த இடத்தில் இக்கருவி ஒன்றை இணைத்து விட்டனர்.
இவற்றில் 2010ல் சிட்னி செய்ன்ட் வின்சென்ட் மருத்துவ மனையில், 50 வயது முதியவர் ஆஞ்சலோ தைகோனோ என்பவருக்குப் பொருத்தப்பட்ட சின்கார்டியா செயற்கை இதயம் மட்டும் 4 வருடங் களுக்குச் செயல்பட்டது.
இதுவும் காற்றழுத்தம் மூலம் இதயத்தை இயங்கவைத்த காரணத்தால்... இதிலும் ரத்த உறைவு மற்றும் நுரையீரல்களில் காற்றழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டன.
இன்னும் மேம்படுத்தப் பட்ட கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இப்போது ‘கார்மட்’ எனும் செயற்கை இதயம் மூலம் பலன் கிடைத்துள்ளது.
இதை உருவாக்கிய டாக்டர் அலென் கார்ப்பென்டியர் கூறுகையில், ‘‘எங்கள் நிறுவன ஆராய்ச்சி யாளர்கள் தான் இக்கருவியைக் கண்டு பிடித்தார்கள் என்றாலும்,
டென்மார்க்கைச் சேர்ந்த ஐரோப்பிய ஏரோநாடிக் டிஃபன்ஸ் மற்றும் ஸ்பேஸ் நிறுவனம் இதை மேம்படுத்திக் கொடுத்தது. பாரீஸில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவ மனையில் இதயம் செயலிழந்த 75 வயது முதியவருக்கு இது பொருத்தப் பட்டது.
டாக்டர் கிறிஸ்டியன் லேட்டர்மௌலி இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். இது லித்தியம் பேட்டரி மூலம் இயங்குகிறது. பேட்டரியை இடுப்பில் அணிந்து கொள்ள வேண்டும்.
இது, சில உயிரிப் பொருள்களுடன் பசுவின் திசுக்களும் கொண்டு தயாரிக்கப் பட்டுள்ளதால், இயற்கை இதயத்துக்கு நிகராக இது கருதப் படுகிறது. ஆகவே, இதை உடல் எளிதாக ஏற்றுக் கொண்டது.
இயற்கை இதயத்தி லிருந்து செயற்கை இதயத்துக்கு ரத்தம் வருகின்ற இடம் பிளாஸ்டிக் இழைகளால் தயாரிக்கப் படாமல், பசுவின் திசுக்களால் தயாரிக்கப் பட்டதாலும்,
காற்றுக்குப் பதிலாக ஹைட்ராலிக் திரவத்தின் அழுத்தம் கொண்டு இது இயக்கப் படுவதாலும் ரத்தம் உறைந்து கட்டியாவது தடுக்கப் பட்டுள்ளது.
இதில் சென்சார் மற்றும் கணினி தொழில்நுட்பமும் இணைந்துள்ள தால், காய்ச்சல், அயர்ச்சி, மகிழ்ச்சி போன்ற நோயாளி யின் உடல், மன மாறுதல் களுக்கு ஏற்ப தன் இயக்க சக்தியை மாற்றிக் கொள்ளும் திறனும் இதற்கு உண்டு.
இதன் எடை 900 கிராம். இது 5 ஆண்டு களுக்கு நீடித்து உழைக்கும்’’ என்கிறார். ‘கார்மட்’ இதயம், அறிவியல் கண்டு பிடிப்பில் ஓர் அரிய வரம்!
Thanks for Your Comments