நம் இதயமே பற்றி எரிகிறது இந்த கொடூரத்தை கண்டால்.. முதுகில் காயம் ஏற்பட்டு, உயிருக்கு போராடும் ஒரு யானை மீது, சிலர் தீ வைத்து கொளுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
இந்நிலையில் திடீரென அந்த யானையின் காது கிழிந்து ரத்தம் கொட்ட தொடங்கியது.. வலியும் வேதனையும் தாங்க முடியாமல் யானை அலறியது.
இதனால் ஊழியர்கள் விரைந்து வந்து யானையை முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
ஆனால், சில நிமிடங்களில் யானை மயங்கி விழுந்து உயிரை விட்டது. அதற்கு பிறகு போஸ்ட் மார்ட்டம் நடத்தினர்..
யானையின் காது பகுதியை பெட்ரோல் வைத்து தீ மூட்டி எரித்ததற்கான தடயங்கள் தென்பட்டன.. யானை மீது ஆசிட் ஊற்றியும் காயப்படுத்தி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது..
தான், காது பகுதி வெந்து போய், யானை துடிதுடித்து இறந்ததும் போஸ்ட் மார்ட்டம் செய்தபோது தெரிய வந்தது..
அந்த காயங்களினால் யானையின் உடலில் இருந்து சுமார் 40 லிட்டர் வரை ரத்தம் வெளியேறி விட்டதாகவும்,
மதுவால் அதிகரிக்கும் நினைவுத் திறன் !
முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த பழைய காயத்தால் யானையின் 2 விலா எலும்புகள் துண்டிக்கப் பட்டிருந்ததாகவும் டாக்டர்கள் சொன்னார்கள்.. இதை கேட்டு நீலகிரி மாவட்டமே அதிர்ந்து போய் விட்டது..
ஃபாஸ்ட்புட் தயாரிப்பின் அசிங்கமான செயல்கள் !
மற்றொரு பக்கம், வனத்துறையினரும், யானையை சித்ரவதை செய்து கொன்றவர்கள் குறித்து க்ளூ ஒன்று கிடைத்துள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைதாவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.. அதில் உயிரிழந்த யானைக்கு சிலர் தீ வைப்பது பதிவாகி உள்ளது..
இருட்டு நேரம்.. முதுகில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட ஒரு யானை தட்டு தடுமாறி வருகிறது.. அப்போதே அந்த யானைக்கு பாதி உயிர் போயிருக்கும்..
மிச்சம் உயிரை காப்பாற்றி கொள்ள புகலிடம் தேடி தள்ளாடி ஒரு தனியார் ரிசார்ட்டுக்குள் நுழைகிறது.. இதை பார்த்ததும் அந்த ரிசார்ட்டு ஊழியர்கள் யானையை அடித்து விரட்ட முயல்கிறார்கள்..
ஆனால், ஏற்கனவே இருந்த ரணங்கள் காரணமாக யானையால் வேகமாக அங்கிருந்து நகர முடியவில்லை.. அப்போதும் ஊழியர்கள் விடவில்லை..
பனிக்கால பாதிப்பில் இருந்து குழந்தையை பாதுகாப்போம் !
யானை மீது எரியும் இரு சக்கர வாகனங்களின் டயர்களை தூக்கி வீசினார்கள்.. அந்த நெருப்பு டயர்கள், யானையின் தலை மீது விழுகிறது..
திபுதிபுவென தீ பற்றி எரிந்த நிலையில், பிளிறி கொண்டே யானை அங்கிருந்து நகர்கிறது. இதன் பிறகு தான் அவ்வளவு ரத்தம் வெளியேறி, துடிதுடித்தவாறே யானை தன் உயிரை விட்டுள்ளது.
குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கான காரணங்களும் சிகிச்சைகளும் !
இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
யானைக்கு சொந்தமான இடங்களை பிடித்து வைத்து கொண்டு, அந்த யானைக்கே இன்று இடமில்லாமல் விரட்டி விட்டதுடன், உயிரோடு கொளுத்திய கொடுமை எங்குமே நடக்காது..!
Thanks for Your Comments