டெல்லியில் இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போது, மத்திய டெல்லியில் ஐடிஓ பகுதி வரை, விவசாயிகளின் ஒரு பிரிவினர் தங்களது பாதையை மாற்றிக் கொண்டு வந்து விட்டனர்.
இதையடுத்து, காவல் துறையினர் அவர்களை தடுத்தனர். இதனால் கோபம் அடைந்த விவசாயிகள் காவல் துறையினரை விரட்டியடித்தனர். பதிலுக்கு போலீசார் தடியடி நடத்தினர்.
ஆன்டி ஆக்ஸிடன்டுகள் என்பது எப்படி செயல்படுகின்றன?
இவ்வாறு இரு தரப்பினரும் மோதிக் கொண்ட போது, ஒரு கான்ஸ்டபிள் மட்டும் போராட்டக்காரர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டார்.
அவரைத் தாக்குவதற்கு கம்புகளுடன் விவசாயிகள் ஒரு பிரிவினர் முயற்சி செய்தனர். அப்போது சில மூத்த விவசாயிகள் கான்ஸ்டபிளை சூழ்ந்து கொண்டு, அவர் மீது யாரும் அடித்து விடாதபடி தடுத்துக் கொண்டனர்.
நர மாமிசம் உண்ட மனிதர்கள்
வேகமாக வந்து சிலர் அடிக்க முற்பட்ட போது கூட அரண் போல சூழ்ந்து நின்று பத்திரமாக அவரை சற்று தூரம் தள்ளிச் சென்று பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#WATCH: A Delhi Police personnel rescued by protesters as one section of protesters attempted to assault him at ITO in central Delhi. #FarmLaws pic.twitter.com/uigSLyVAGy
— ANI (@ANI) January 26, 2021
Thanks for Your Comments