சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள தும்பல் பகுதியை சேர்ந்த மாணவி, வாழப்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
கடந்த சில நாட்களாக மாணவிக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
நம் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க !
இந்நிலையில், கொரோனா பரிசோதனையில் மாணவிக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினர் மாணவியின் வீட்டிற்கு சென்ற போது அவர் பள்ளிக்கு சென்றது தெரிய வந்தது.
உடனடியாக பள்ளிக்கு விரைந்த அதிகாரிகள் மாணவியை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்று ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாணவி உடன் விடுதியில் தங்கிய 36 மாணவிகள், வகுப்பறையில் தொடர்பில் இருந்த 25 மாணவிகள், விடுதி வார்டன், ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 72 பேரை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
மாணவி பயின்று வந்த வகுப்பறையில் கிருமி நாசினி தெளித்து 10 நாட்களுக்கு மூடப்பட்டது. மாணவிக்கு எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என ஆய்வு மேற்கொண்டுள்ளதுடன், அவரது கிராமத்தில் சுகாதாரப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
குழந்தைகள் முன்பு உடை மாற்ற கூடாது ஏன்?
இதனிடையே, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 5-ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வளத்தாமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த பள்ளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
Thanks for Your Comments