சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் நேற்று திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பவுரிங் மருத்துவமனை நிர்வாகம் சசிகலா உடல்நிலை குறித்து நேற்று இரவு அறிக்கை வெளியிட்டது.
அதில், சசிகலாவிற்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஹைப்போ தைராய்டிசம் ஆகியவற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தது. நோய் எதிர்ப்பிகள், ஆக்சிஜன் சப்போர்ட் ஆகியவை மூலம் சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருவார காலமாக சசிகலாவிற்கு காய்ச்சல் இருந்ததாக சிறை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் என்னவென்றால், சசிகலா உடம்புக்கு ஆபத்து இல்லை.. அவருக்கு நல்ல சிகிச்சை தரப்படுகிறது என்று கூறியுள்ளார்.
திருமண உறவில் பெண்கள் எதிர் பார்ப்பது - புதிய ஆய்வு !
தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழக அரசியலில் இருப்பவர் சசிகலா. அவர் வெளியே வந்தால் தமிழக அரசியலே தலைகீழாக மாறிப் போய் விடும்.
அதற்காகத்தான் பலரும் காத்துக் கிடக்கின்றனர். இதைத்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கூட சொல்லி வருகிறார். இந்த நிலையில் சசிகலாவுக்கு உடம்பு சரியில்லை என்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
உண்மையில் சசிகலாவுக்கு என்னாச்சு என்று தெரியவில்லை... கொரோனா இல்லை என்று சொல்லி விட்டார்கள்..
இருந்தாலும் ஆக்சிஜன் லெவல் குறைந்திருப்பது ஏன்? அவருக்கு மூச்சு திணறல் வருவது ஏன்.. ஐசியூவில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நிலைமை போயிருப்பது ஏன்.. ரொம்ப நாளாகவே அவருக்கு உடம்பு சரியில்லையா.. இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
சசிகலாவுக்கு வேறு உடல் உபாதைகள் ஏதாவது இருக்கிறதா? அவருக்கு பிரஷர் இருக்கிறதா அல்லது பிரஷர் அதிகரிக்கும் அளவுக்கு ஏதாவது சம்பவம் நடந்து விட்டதா? என்பன போன்ற பல கேள்விகளும் கூடவே எழுகின்றன.
எது எப்படியோ சசிகலா திரும்பி வர வேண்டும், அதுவும் பழைய வைராக்கியத்துடன் வர வேண்டும், ஆரோக்கியமாக திரும்ப வேண்டும் என்று மன்னார்குடி உறவுகள் ஆர்வத்துடன் காத்துள்ளன.
மாரத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி !
ஒரு பக்கம் கமலா ஹாரிஸால் மன்னார்குடி வட்டாரமே நேற்று பரவசமாக காணப்பட்டது.
ஆனால் அதே மண்ணின் மகளான சசிகலாவுக்கு மூச்சுத் திணறல் என்று கேள்விப்பட்டதும் மன்னார்குடி மக்கள் சற்றே பதட்டமாகி விட்டது உண்மைதான்.
Thanks for Your Comments