ஹேமந்த் தினமும் ஒரு உள்ளாடையை வாங்குற பழக்கம் இருப்பவராம்.. எப்போ வேண்டுமானாலும் எந்த பெண்களிடமும் காசு கொடுத்து விட்டு ஜாலியாக இருந்து விட்டு வருவாராம்..
இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சித்ரா தற்கொலை செய்து கொண்ட பிறகு ஹேமந்த்தின் செல்போன் உரையாடலையும் அவரது நண்பர் வெளியிட்டுள்ளார்.
மலச்சிக்கல் தீர கவனிக்க வேண்டிய விஷயங்கள் !
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக ஹேமந்த்தின் நீண்டகால நண்பர் அளித்துள்ள வாக்கு மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவில் சித்ரா தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதற்கட்டமாக வழக்கை கையில் எடுத்த நசரத்பேட்டை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வந்த நிலையில் ஹேமந்த்தை கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரோகித்தும், ஹேமந்தும் 10 வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
சித்ரா நடித்து வந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த நபருடன் சித்ரா நெருக்கமாக நடனமாடுவது ஹேமந்த்துக்கு பிடிக்கவில்லை.
அதனால், பலமுறை சித்ராவை கண்டித்து வந்த ஹேமந்த் சில நேரங்களில் ரத்தம் வரும் அளவிற்கு சித்ராவை அடித்து தாக்கியுள்ளார். கட்டிலில் தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளார்.
அப்போது, ரோகித்தும் அவ்ரது மனைவியும் ஹேமந்தை சமாதானப்படுத்தி வந்துள்ளனர். மேலும், ''சித்ரா ஒரு நல்ல பெண். அவர் வளர்ந்து வரும் நடிகை.
அவரை போன்ற காதலி கிடைத்ததற்கு நீதான் பெருமை கொள்ள வேண்டும்'' என்று ஹேமந்த்துக்கு பலமுறை ரோகித் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆனால், எதையும் காதில் வாங்காத ஹேமந்த், சித்ராவை எப்போதும் சந்தேக கண்ணோட்டத்தில் சித்ரவதை செய்தும், ஷூட்டிங் நடக்கும் இடங்களில் சென்று தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார்.
மேலும், சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு சில நிமிடங்கள் கழித்து ரோகித்தை ஹேமந்த் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
பின்னர் சிகரெட் பிடிக்க நான் வெளியே சென்று விட்டேன். அப்போது, அவள் கதவை சடாரென சாத்திக் கொண்டாள். சரி, உள்ளே சென்று அழுவாள் என்று நான் நினைத்திருந்தேன்.
சிகரெட் முடிந்ததும், கதவை தட்டினேன் திறக்கவில்லை. ஜன்னலை தட்டி பார்த்தேன், உள்ளே சித்ரா முணுமுணுக்கும் சத்தம் மட்டும் கேட்டது.
பின்னர் மாற்று சாவி வாங்கி வந்து கதவை திறந்தேன். அப்போது, பாவி தூக்கில் தூங்குகிறாள் என்று விவரிக்கும் ஹேமந்த், போலீஸ் கேட்டால், எங்களுக்குள் எந்த சண்டையும் வராது,
அப்படி வந்தாலும் உடனே கட்டி அணைத்துக் கொண்டு சமாதானம் ஆகி விடுவார்கள் என்று சொல்லிவிடு'' என்று ஹேமந்த் ரோகித்திடம் பேசியுள்ளார்.
இந்த நிலையில் கொஞ்ச நாள் ஓய்ந்து கிடந்த சித்ராவின் மரண வழக்கு தற்போது 4 நாட்களாக சூடுபிடித்து வருகிறது.. அதற்கு காரணம், ஹேமந்த்தின் நண்பர் ரோகித் என்பவர் தான்..
இவர், ஹேமந்த்துக்கு ஜாமீன் தரக்கூடாது என்று ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன் ஆதாரமாக சில ஆடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இவர் யார் ஹேமந்த்துக்கு ஜாமீன் தரக்கூடாது என்று சொல்வதற்கு? இவ்வளவு நாள் எங்கிருந்தார்? ஏன் ஆடியோவை போலீசில் தரவில்லை? என்றெல்லாம் ஓய்வு பெற்ற சிபிஐ இயக்குனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
அத்துடன் இந்த ஆடியோ விவகாரமும் சித்ராவின் மரண வழக்கை திசை திருப்பும் வகையில் இருப்பதாகவும் கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.
மேலும், ரோகித் அளித்து வரும் பேட்டிகளில், ஹேமந்த் குறித்து சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் பகீரை கிளப்புகிறது..
சித்ரா கன்னித் தன்மையுடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் ஹேமந்த்துக்கு பலமுறை இருந்ததாம்.. அதை உறுதி செய்து கொள்ள, டாக்டர்களிடம் செக்கப் செய்ய வேண்டும் என்று சொன்னாராம்.
மேலும் ஹேமந்த் இயல்பாகவே உல்லாசத்துக்கு ஆசை கொண்டவராம். தினமும் ஒரு உள்ளாடையை வாங்கும் பழக்கமும் ஹேமந்த்துக்கு இருந்துள்ளது.
அது மட்டுமல்ல, நினைக்கும் நேரத்தில், நினைக்கும் பெண்களிடம் பணத்தை வாரி இறைத்து ஜாலியாகவும் இருப்பாராம்..
இப்படி பல தகவல்களை ரோகித் சொன்னது தான், சித்ரா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், இப்படிப்பட்ட குணங்களை உடைய ஹேமந்த்துடன், ரோகித் ஏன் கடைசிவரை நட்பாக இருந்தார்? ஏன் அப்போதே போலீசில் இதை பற்றி சொல்லவில்லை?
குறைந்தபட்சம் சித்ராவிடமாவது இதை யெல்லாம் சொல்லி அவரை அலர்ட் செய்திருக்கலாமே? என்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
Thanks for Your Comments