பூரான் கடித்தால் விஷமா? என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

0

உருவத்தில் சிறிது, விஷமும் குறைவாக இருந்தாலும் பூரான் கடித்தால் உடல் முழுவதும் தடிப்பு வந்து விடும் . 

பூரான் கடித்தால் விஷமா?
அமாவாசை பவுர்ணமி நாட்களில் மீண்டும் தடிப்பு அதிகமாகும் என்ற நம்பிக்கை நம் நாட்டு மக்களிடையே அதிகமாக உள்ளது. 

பூரான் கடித்தால் விஷமா? இந்த நம்பிக்கையை சரியா? தவறா? என்பதை பற்றி இன்று பார்ப்போம்....

மார்பகப் புற்று நோய்க்கும் எலும்புக்கும் உள்ள தொடர்பு !

40 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை. தொல்லுயிர் எச்சமாக படிமங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பூரான்கள் உள்ளிட்டவை சென்டிபீட் எனப்படும் இனத்தைச் சார்ந்தவை. 

மொத்தம் 3500 வகைகள். இதில் 15 மட்டுமே ஓரளவு மனிதர்களைப் பாதிக்கும் விஷத்தன்மை கொண்டவை. பாம்பைப் போல் விஷப்பல்லோ தேளைப் போல் கொடுக்குகளோ இவைகளுக்கு கிடையாது . 

நூற்றுக் கணக்கில் உடற்பகுதிகளும் அப்பகுதிகளிலிருந்து கால்களும் இருக்கும். இவைகளுடைய நீளம் மிகச்சிறியதாக - ஒரு இன்ச் அளவில் இருந்து மிகப்பெரிய அளவு 8-10 வரை இருக்கலாம்.

முன்னங் கால்களில் ஒரு இணை விஷத்தை செலுத்தும் கொடுக்கு போல செயல்படுகிறது போர்சிபியூல்ஸ் என்பார்கள். இவைகள் சாதாரணமாக நம்மைப் பார்த்தால் பயந்து ஓடும் சிறு பூச்சியினம் தான். 

பூரான் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இருட்டாகவும் ஒதுக்குப்புறமாக இருக்கும் கற்கள், பாறைகள், அவைகளின் அடியே குடிருக்கும் இடங்கள். சிறு பூச்சிகள். புழுக்கள். கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இவற்றின் பங்கு மிக அதிகம். 

இந்த பூச்சிகளை பிடித்து இது உண்ண ஆரம்பிக்கும் போது தன்னுடைய முன்னங்கால்களில் மூலம் சென்று செலுத்தும் விஷம் அந்த பூச்சி யினுடைய இதயம் மற்றும் நரம்பு பகுதியைப் பாதித்து செயலிழக்க செய்து பின்னர் அதை உண்ணும்.

கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC) செய்வது

மனிதர்களுக்கு இந்த பூச்சியின் விஷம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக இது வரை நிரூபிக்கப்படவில்லை. 

அமெரிக்க நாட்டில் பாலைவனத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பூரான்கடி மூலம் இப்போது வரை 5 பேருக்கு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது அதுவும் உறுதி செய்யப்பட வில்லை.

நமது நாட்டில் உள்ள பூரான்கள் விஷத்தன்மை வாய்ந்தவை அல்ல அதன் கடிக்கு நமது உடலில் பெரும் பாதிப்புகள் ஏற்படாது. 

சிறு குழந்தைகள் மற்றும் ஒவ்வாமைத் தன்மை உடையவர்கள் தோலில் தடிப்புகள் ஏற்படுதல், அரிப்பு, தோல் பாதிப்பு, தொற்று என பிரச்சினைகள் ஏற்படலாம். 

மிகச்சிறிய குழந்தைகளுக்கு படபடப்பு, மயக்கம், வாந்தி, தலை சுற்றல், தலைவலி என மற்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

பூரான் கடித்தவுடன் அந்த இடத்தை சுத்தமாக தண்ணீரில் கழுவ வேண்டும் கடிவாயில் பனிக்கட்டி வைப்பதால் உடலில் கலக்கும் நஞ்சுனுடைய அளவு குறைந்து விடும். 

என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

பிறகு வலியை குறைப்பதற்காக வலி நிவாரணிகள் நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க மாத்திரைகள் தேவைப்படலாம்.

சுத்தம் செய்தபின் மருந்துபோட வேண்டும் .கடிவாய் பெரியதாக வீக்கம் மற்றும் தோலில் பாதிப்பு இருப்பின் 5 நாட்கள் வரை நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு மருந்து சாப்பிட வேண்டும். 

இதற்கு முன்னால் டிடி தடுப்பூசி (ஐந்து வருடத்துக்குள் போடாமல் இருந்தால்) போட்டு விட வேண்டும். பூரான் கடிக்கு வேறு எந்த தடுப்பூசியும் நமது ஊரில் கிடையாது. 

தடிப்பு ஏற்பட்டு இருப்பின் அதற்கான மருந்துகளும் அரிப்பினைக் குறைப்பதற்கான மருந்துகளை எழுதித் தருவார்கள். 5 லிருந்து 10 நாட்கள் வரை உட்கொள்ள வேண்டியிருக்கும்

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings