பூட்டிய வீட்டில் திருட்டு... பித்தளை பாத்திரத்தில் இருந்த நகை தப்பியது !

0

சென்னை ஆவடி, பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவரின் மனைவி சங்கீதா. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். 

பித்தளை பாத்திரத்தில் இருந்த நகை தப்பியது
கடந்த டிசம்பர் மாதம், 18-ம் தேதி சங்கீதாவின் சொந்த ஊரான ஓசூருக்கு குடும்பத்தினரை தேவராஜன் அழைத்துச் சென்றார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவராஜனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீட்டினர் அவருக்குத் தகவல் தெரிவித்தனர். 

நர மாமிசம் உண்ட மனிதர்கள்

அதனால் அதிர்ச்சியடைந்த தேவராஜன் குடும்பத்தினரோடு சென்னை திரும்பினார். அதற்குள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டிலிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருள்கள் அனைத்தும் வீடு முழுவதும் சிதறிக்கிடந்தன. 

தகவல் கிடைத்ததும் ஒசூரிலிருந்து சென்னை வந்த தேவராஜன் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 31 சவரன் தங்க நகைகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். 

அது குறித்து மனைவியிடம் தேவராஜன் கூறியபோது சங்கீதா, `கவலைப்படாதீங்க, தங்க நகைகளை நான் பீரோவில் வைக்கவில்லை’ என்று கூறினார். 

பின்னர், சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பித்தளைப் பாத்திரங்களிலிருந்து தங்க நகைகளை எடுத்து தேவராஜனிடம் சங்கீதா கொடுத்தார். அதைப் பார்த்த தேவராஜன், நிம்மதியடைந்தார்.

இதையடுத்து ஆவடி காவல் நிலையத்தில் தேவராஜன் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கைரேகைகளைப் பதிவு செய்தனர். 

சன்னி லியோன் வாழ்க்கை

இந்தச் சம்பவத்தில் எந்தப் பொருள்களும் கொள்ளை போகவில்லை யென்றாலும், கொள்ளையடிக்க முயன்றவர்கள் யாரென்று போலீஸார் சிசிடிவி உதவியோடு தேடிவருகின்றனர். 

தேவராஜனின் மனைவி சங்கீதாவின் புத்திச்சாலித்தனமான இந்தச் செயலால் 31 சவரன் தங்க நகைகள் கொள்ளை போகாமல் தடுக்கப் பட்டிருக்கின்றன. 

அதனால் சங்கீதாவுக்கு போலீஸாரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இது குறித்து சங்கீதா கூறுகையில், எங்கள் வீட்டில் நான்கு பீரோக்கள் இருக்கின்றன. 

அவற்றில் தங்க நகைகளை வைத்தால் கொள்ளை போய்விடும் எனக் கருதித்தான் சமையலறையில் பித்தளை பாத்திரங்களில் தங்க நகைகளை வைத்திருப்பேன். 

பூட்டிய வீட்டில் திருட்டு...
இது, என்னைத் தவிர வீட்டில் யாருக்கும் தெரியாது. சமீபத்தில் என் தந்தை இறந்து விட்டார். அதனால் அவர் பார்த்து வந்த தொழிலை கவனிக்கத் தான் நானும், என் கணவரும், குழந்தைகளும் ஓசூருக்குச் சென்றோம். 

வீட்டைப் பூட்டி விட்டுச் செல்லும் போது வழக்கம் போல கொள்ளையர்களுக்கு பயந்து 31 சவரன் தங்க நகைகளை பித்தளைப் பாத்திரத்தில் வைத்து விட்டுச் சென்றேன். 

கொழுப்பு சத்தால் அவதிப்படுபவரா? இந்த எண்ணெயை பயன்படுத்தவும் ! 

வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், நான்கு பீரோக்களையும் உடைத்து அதில் தங்க நகைகளைத் தேடியிருக்கின்றனர். 

நல்ல வேளையாக பித்தளைப் பாத்திரத்தில் வைத்திருந்த தங்க நகைகள் கொள்ளையர்களின் கண்களில் சிக்கவில்லை" என்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings