கென்டக்கி ஃபிரைடு சிக்கன் (KFC) சாண்டெர்ஸ் வாழ்க்கையின் திருப்பு முனை !

0

ஹார்லேன்ட் டேவிட் சாண்டர்ஸ், இவர் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள துரித உணவகமான கென்டக்கி ஃபிரைடு சிக்கனின் (KFC) நிறுவனர். 

கென்டக்கி ஃபிரைடு சிக்கன் (KFC) சாண்டெர்ஸ் வாழ்க்கையின் திருப்பு முனை

அவர் தனது 49வது வயதில் "இரகசிய ரெசிபி"யை முடிவு செய்து, தனது 65 வயதில் அதனை வணிகமாக்க துவங்கினார். 

அவர் மிகசிறப்பாக அனைவரும் விரும்புமாறான கோழி வருவல் உணவை தயாரித்திடுவார் 

ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு முன்னால் கர்னல் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு இனிமையானது அல்ல.

6 வயதில் சமையல்

6 வயதில் சமையல்

சாண்டர்ஸ் தனது தந்தையை 5 வயதில் இழந்தார், அதனால் அவரது தாயார் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. 12 வயது இருக்கும் போது அவரது தாயார் மறுமணம் செய்து கொண்டார். 

1980 சாண்டர்ஸ் இறக்கும் வரை 2.5 இலட்சம் மையில் அவர் பயணம் செய்ததாக Houston பல்கலைகழகம் கூறுகிறது.

மூன்று பிள்ளைகளில் மூத்தவர் என்பதால் சாண்டர்ஸ் தனது உடன் பிறந்தவர்களை பாதுகாத்து அவர்களுக்காக உணவும் சமைக்க வேண்டிய நிலைமை. 

மார்பகப் புற்று நோய்க்கும் எலும்புக்கும் உள்ள தொடர்பு !

இதனால் படிப்படியாக அவர் காய்கறி மற்றும் இறைச்சி சமைப்பதில் நிபுணத்துவம் பெற்றார். அவரது மாற்றாந்தந்தை உடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சாண்டர்ஸ் 12 வயதில் தனது வீட்டை விட்டு வெளியேறினார். 

கடின உழைப்பு இருந்த போதிலும், சாண்டர்ஸ்  கோபத்தாலும் கீழ்ப்படியாமை குணத்தாலும்  வேலைகளில் நிலையில்லாமல் இருந்தார். 

சட்டப் படிப்பு 

சட்டப் படிப்பு

சட்டப் படிப்பு படிப்பதற்கு முன்னர், அவர் ஒரு பண்ணை தொழிலாளியாகவும், ஒரு டிரக் டிரைவராகவும், ஒரு நீராவி இயந்திர பணியாளராகவும் மற்றும் ஒரு இரயில்வே தொழிலாளியாகவும் பணி புரிந்தார். 

துரதிர்ஷ்டவசமாக, அவருடைய சட்டத் தொழில் ஒரு நீதிமன்ற அறையில் தனது வாடிக்கையாளருடன் முரண்பட்ட போது முடிவடைந்தது.

செயலாளர்

செயலாளர்

பின்னர், சாண்டர்ஸ் தனது தாயுடன் தங்கி ஒரு காப்பீட்டு விற்பனையாளராக மற்றும் அவரது சொந்த படகு நிறுவனத்தில் ஒரு செயலாளராகவும் பணியாற்றினார். 

அசெட்டிலீன் விளக்கு உற்பத்திக்கான அவரது அடுத்த முயற்சி டெல்கோ போட்டியிட்டதால் தோல்வியடைந்தது. 

கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC) செய்வது

சாண்டர்ஸ் பின்னர் கென்டக்கிக்கு சென்று அங்கு "மிச்செலின்" டயர் கம்பெனிக்கு டயர் விற்பனையாளராக பணியாற்றினார், மேலும் "ஸ்டேண்டர்டு ஆயில் ஆப் கென்டக்கி"யில் எரிவாயு நிலைய இயக்குனராகவும் இருந்தார்.

கர்னல் பட்டம்

கர்னல் பட்டம்

சாண்டெர்ஸ்சின் 39 வயதில், அமெரிக்காவின் பெரும் சந்தை வீழ்ச்சி ஏற்பட்டது. அவர் வேலை செய்த எரிவாயு நிலையம் மூடப்பட்டது. 

சாண்டெர்ஸ் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்பு முனையாக இந்த வீழ்ச்சியென அமைந்தது. ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, ஷெல் நிறுவனம் சாண்ட்ஸருக்கு ஒரு சேவை நிலையத்தை கமிஷனுக்கு குடுத்தது. 

காதலி கிளாடியா லேடிங்டன்-ப்ரைஸை, கென்டக்கி மோட்டலின் உரிமையாளராக மாற்றினார்

சாண்டர்ஸ் அவ்விடத்தில் சமைத்த கோழி வகையே இப்போது உலகெங்கிலும் உள்ள " கேஎப்சீ " உணவகங்களில் செய்யப்படுகிறது. 

கென்டக்கி ஃபிரைடு சிக்கன் (KFC) சாண்டெர்ஸ் வாழ்க்கையின் திருப்பு முனை !

சாண்டர்ஸ் தனது சேவை நிலைய சமையலறையில் சமைத்த வறுத்த கோழி, ஸ்டீக்ஸ் மற்றும் நாட்டின் ஹாம் ஆகியவை உலக புகழ்பெற்ற பிறகு கென்டக்கி கர்னல் கௌரவப் பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் பெற்றார். 

1939 ஆம் ஆண்டு நடைபெற்ற தேங்க்ஸ்கிவிங் நிகழ்ச்சியின் போது அவர் விரிவு படுத்திய மோட்டல் எரிந்துப் போனது.

இரகசிய ரெசிபி

இரகசிய ரெசிபி

பின்பு, சாண்டர்ஸ் தனது மோட்டலில் 140 இருக்கை உணவகத்தை மீண்டும் கட்டினார். 1940 ஆம் ஆண்டு கோடையில் பதினொரு மூலிகைப் பொருட்கள் அடங்கிய "இரகசிய ரெசிபி" மற்றும் மசாலாக்களை முடிவு செய்தார். 

அமெரிக்கா 1941 டிசம்பரில் இரண்டாம் உலகப்போரில் நுழைந்த போது, சாண்டர்ஸ் வடக்கு கரோலினாவில் நடத்தி வந்த மோட்டலை மூடும் நிலை ஏற்பட்டது . 

எப்போதுமே கவர்ச்சியை விரும்பும் தொகுப்பாளினி அஞ்சனா !

அவர் தனது காதலி கிளாடியா லேடிங்டன்-ப்ரைஸை, கென்டக்கி மோட்டலின் உரிமையாளராக மாற்றினார். 

அவர் டெண்ணஸியில், உணவு விடுதிகளை நிர்வகித்து, அரசியல் வேட்பாளராக போட்டியிட்டு, மேலும் ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் நிர்வாகத்திற்கு தன்னார்வளராகவும் விழங்கினார்.

உலகமும் முழுவதும்

உலகமும் முழுவதும் KFC

1952 ஆம் ஆண்டில், சாண்டர்ஸ் கென்டக்கின் மிகப்பெரிய உணவுவிடுதி உரிமையாளரான பீட் ஹர்மன் என்பவரை சந்தித்தார். 

வறுத்த கோழியை விரும்பிய ஹர்மான் அதன் உரிமத்தை பெற நினைத்தார் மற்றும் அதன் செய்முறையை ரகசியமாக வைத்திருக்கவும் முடிவு செய்தார். 

65 வயதில் சாண்டர்ஸின் தொழில் வாழ்க்கை முடிவடைந்தது என்று நினைத்த போது KFC இன் வணிக உரிமம் துவங்கியது

இது ஹர்மனின் உணவகத்தின் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்தது மேலும் உணவக உரிமையாளர்களை ஈர்க்கவும் ஆரம்பித்தது. 

முட்டை உண்பதால் சர்க்கரை நோய் உண்டாகுமா?

கென்டக்கி ஃபிரைடு சிக்கன் என்ற வார்த்தையை ஹர்மன் பணியமர்த்திய ஒரு ஓவியர் உருவாக்கினார், 

அதே நேரத்தில் ஹர்மன் பக்கெட் பேக்கேஜிங் என்ற கருத்துடன் வந்து "ஃபிங்கர் லிகின் குட்" என்ற வரியை பயன்படுத்தவும் வலியுறுத்தினார்.

வணிகம் 

வணிகம்

விற்கப்பட்ட ஒவ்வொரு கோழி துண்டுக்கும் சாண்டர்ஸ்க்கு நான்கு சென்ட்டுகள் வழங்கப்பட்டது, கென்டக்கி உணவகத்திலும் அவரது வணிகம் வளர்ந்து கொண்டிருந்தது. 

துரதிருஷ்ட வசமாக, மாநிலங்களுக்கு இடையே ஆன நெடுஞ்சாலை அமைப்பு, I-75 காரணமாக, சாண்டர்ஸ் தனது கென்டக்கி வணிகத்தை விற்பதற்கான கட்டாயம் ஏற்பட்டது . 

65 வயதில் சாண்டர்ஸின் தொழில் வாழ்க்கை முடிவடைந்தது என்று நினைத்த போது KFC இன் வணிக உரிமம் துவங்கியது.

சாண்டர்ஸ் வணிக உரிமையை தனது தொழிலாக மாற்றி அவரது வறுத்த கோழி உரிமத்தை விரிவுப் படுத்த நீண்ட தூரம் பயணம் செய்ய முடிவெடுத்தார்.

ராயல்டி

ராயல்டி

இது புவியியல் கட்டுப்பாட்டிலிருந்து அவரை விடுவித்து, அதற்கு பதிலாக வாடிக்கையாளர்களை இந்த ப்ராண்டிற்கு விசுவாசமாக இருக்க வைத்தது. 

சாண்டர்ஸ் உணவின் தரம் குறையாமல் இருக்க மேற்பார்வை இடுவதோடு , அவரது உணவின் உரிமம் விற்று அதன் மூலம் ஆதாயம் பெற்றார் (ராயல்டி). சாண்டெர்ஸ், 

கோலா குளிர்பானங்களை குடிப்பதால் என்னாகும்?

தனது 73வயதில் 600 க்கும் அதிகமான இடங்களுக்கு கேஎப்சீயை விரிவடைய செய்திருந்தார், அதனை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. 

1964 ஆம் ஆண்டில், ஜான் ஒ. பிரவுன், ஜூனியர் மற்றும் ஜாக் சி. மாஸி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு குழுவிற்கு 2 மில்லியன் டாலருக்கு (இன்று $ 15 மில்லியன் மதிப்புள்ள) நிறுவனத்தை விற்று விட்டார்.

1964-ல் கேஎஃப்சி

1964-ல் கேஎஃப்சி

கேஎஃப்சி யை விற்க சாண்டர்ஸ் முடிவெடுத்ததற்கு அதன் வளர்ச்சியே காரணம். கனடா, இங்கிலாந்து, ஜமைக்கா மற்றும் மெக்ஸிகோவிலிருந்த உணவகங்களுக்கு பிறகு, கேஎப்சி ஆசியாவில் விரிவு படுத்தப்பட்டது. 

மனைவி மகிழ்ச்சியாக இருந்தால்

1970 -ல், கேஎப்சீ யின் மார்கெட்டிங் மற்றும் சாண்டர்ஸ்சின் "கர்னல் சாண்டர்ஸ்" என்ற அடைமொழி காரணமாக கேஎப்சீ உலகளவில் 3000 உணவகங்களாகவும் 48 நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 

நம்பிக்கை, கனவு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு கேணல் சாண்டர்ஸ் வாழ்க்கை பயணம் ஒரு உதாரணம்.

சாண்டர்ஸ் கேஎஃப்சி பிராண்ட் தூதராக ஆன பின்பு, பல தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

அவர் எப்போதுமே உரிமையாளர்களால் விற்கப்பட்ட கோழியின் தரத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்தினார்.

89 வயது வரை

89 வயது வரை

தனது 89 வயதில் கூட, அவர் கேஎப்சீ உணவகங்கள் எதற்கேனும் திடீர் வருகை தந்து , தயாராகும் உணவை மேற்பார்வை இடுவார், அப்படி பல முறை, அங்கு தயாரிக்க படும் உணவு முறை அவருக்கு மகிழ்ச்சி தரவில்லை. 
நீங்கள் கேள்விப்படாத விசித்திரம் நிறைந்த கொடூரமான மரணம் ! 

அசல் ரெசிபியில் செய்த கோழியை விற்பனை செய்வதற்காக உணவகம் திறக்க சாண்டர்ஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, 

அவர் 122 மில்லியன் டாலர் பெற தலைமை நிறுவனமான ஹீயூப்லின் இன்க், மீது வழக்கு தொடர்ந்தார். இறுதியில் $ 1 மில்லியனுக்கு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

துரித -உணவு பிராண்ட்

துரித -உணவு பிராண்ட்

1980 ஆம் ஆண்டு சாண்டர்ஸ் தனது 90 வயதில், கடுமையான லுகேமியா நோயால் இறந்தார். 

அவரது இறப்பு நேரத்தில், உலகம் முழுவதும் 6000 கேஎப்சீ உணவகங்களும், ஆண்டுதோறும் $ 2 பில்லியன் மதிப்பிற்கு விற்பனையும் இருந்தன. 

இன்று, மெக்டொனால்ஸ்க்குப் பிறகு இரண்டாவது பெரிய உணவகமாக கேஎப்சீ உள்ளது, மற்றும் 123 நாடுகளில் 20,000 இடங்களில் கடையுடன், 2013 இல் $ 23 பில்லியன் மதிப்புடையதாக இருந்தது.

நாம் கற்றுக்கொள்ள வேண்டியது

நாம் கற்றுக்கொள்ள வேண்டியது

கர்னல் சாண்டர்ஸின் வாழ்க்கை நம் வாழ்க்கையில் தோல்விகள் மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் பங்கு பற்றி சுட்டிக் காட்டுகிறது. 

சாண்டர்ஸ் ஒவ்வொரு தோல்வியையும் வாய்ப்பாக கருதினார். ஒரு தயாரிப்பு அதன் விளம்பர யுக்தியை பொருத்து வளர்வதும் வீழ்வதும் அமையும் என்பதை உணர்த்துகிறது .

சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள் !

கேஎஃப்சி பொறுத்த மட்டில் பிரான்ச்சைசிங் மற்றும் கர்னல் என்ற தன்னியர்ப்பு பட்டம் வர்த்தக வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது. 

மிக முக்கியமாக, சாண்டர்ஸ் நம்முடைய தொழில் வாழ்க்கையில் தரமான பராமரிப்பின் முக்கியத்துவத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையில் துணிச்சலோடு செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் நமக்குக் கற்பித்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings