மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் என்று அக்டோபரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், மார்பகப் புற்று நோய்க்கும் ஆஸ்டியோ போரோசிசுக்கும் உள்ள தொடர்பு பற்றி இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
மார்பகப் புற்று நோய்க்கும் எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப் படுவதற்கும் தொடர்புண்டு.
மார்பகப் புற்று நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பெண்களுக்கு ஆஸ்டியோ போரோசிஸ் பாதிப்புக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த கூடியவை.
மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு ஆஸ்டியோ போரோசிஸ் பாதிப்பு ஏற்படும். அதன் தொடர்ச்சியாக எலும்புகள் வலுவிழக்கும், அவை மிருதுவாகி எளிதில் ஃபிராக்ஸர் ஆகும் தன்மைக்கு மாறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்போர் கண்டிப்பாக அவர்களுடைய எலும்புகளின் ஆரோக்கியம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
அதிலும் குறிப்பாக, ஏற்கனவே குடும்ப பின்னணியில் ஆஸ்டியோ போரோசிஸ் பாதிப்பு உள்ளவர்களும் கால்சியம் குறைபாடு உள்ளவர்களும் வைட்டமின்-டி குறைபாடு உள்ளவர்களும் அவசியம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் போது இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும்.
* அடர்த்தியின் தன்மை எப்படி இருக்கிறது, அது குறைந்து வருகிறதா?
* ஃபிராக்சர் ஏற்படும் போது அது இயல்பாக நிகழ்ந்ததா அல்லது எலும்புகளின் அடர்த்தி குறைந்ததால் ஃபிராக்சர் அபாயம் அதிகரித்ததன் விளைவால் நிகழ்ந்ததா?
ஆஸ்டியோ போரோசிஸ் அபாயம் அதிகரிப்பது ஏன்?
மார்பக புற்று நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் நேரடியாக ஈஸ்ட்ரோஜன் அளவுகளுடன் வினை புரியக் கூடியவை.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்த சிகிச்சைகள் மெனோபாஸ் காலத்துக்கு முந்தைய நிலையிலிருக்கும் பெண்களுக்கு சினைப்பை செயலிழப்பை ஏற்படுத்தலாம்.
நம் இந்தியாவை பற்றி நாம் அறிந்திராத முக்கியமான தகவல்கள் !
அதன் தொடர்ச்சியாக ஈஸ்ட்ரோஜன் அளவு மேலும் குறையும். குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே மெனோபாஸ் ஏற்படவும் காரணமாகும்.
கீமோதெரபி
இந்த சிகிச்சையின் மூலம் மெனோபாஸுக்கு முந்தைய நிலையில் இருக்கும் பெண்களுக்கு சினைப்பை செயலிழப்பு ஏற்படுவதுடன் ஈஸ்ட்ரோஜன் அளவு வெகுவாக குறைந்து எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும்.
போகப் போக அதன் தீவிரம் அதிகமாக இருக்கும். கீமோதெரபி அளிக்கப்பட்ட முதல் 12 மாதங்களில் முதுகெலும்பில் ஏற்படும் இந்த பாதிப்பு 3 முதல் 4 சதவிகிதமாக இருக்கும்.
கீமோதெரபிக்கு பிறகு சினைப்பை செயலிழப்பு ஏற்படாத நிலையில் எலும்புகளின் அடர்த்தியில் பெரிய மாற்றம் இருக்காது.
ஏற்கனவே மெனோபாஸ் வந்த பெண்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படும் போது அவர்களுடைய எலும்புகளின் அடர்த்தி வெகுவாக குறையும்.
மருந்துகள்
மார்பக புற்றுநோய்க்கு அளிக்கப்படும் மருந்துகள் உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பை தடுக்கக் கூடியவை.
இதனால் இளவயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியத்தை தக்க வைக்க போதுமான அளவு ஈஸ்ட்ரோஜன் இல்லாமல் போகும்.
கர்ப்பிணிப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை !
மார்பகப் புற்று நோய்க்காக பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட சில மருந்துகள் முதுகெலும்பு பாதிப்பில் தீவிரத்தைக் காட்டும். அதாவது அந்த பகுதியில் எலும்புகளின் இழப்பு வருடத்துக்கு 1.4 சதவீதமாக இருக்கும்.
மெனோபாஸ் அடைந்து விட்ட பெண்களுக்கு முதுகெலும்பு பகுதியில் ஏற்படும் இந்த எலும்பு இழப்பு வருடத்துக்கு 1.2 சதவீதமாக இருக்கும்.
இவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயமும் மற்றவர்களை விட சற்றே அதிகமாக இருக்கும்.
புற்றுநோயானது நிணநீர் சுரப்பிகள் வரை பரவிவிட்ட பெண்களுக்கு வெளிநாடுகளில் அரோமா டேஸ் இன்ஹிபிட்டர்ஸ் (Aromatase inhibitors) என்ற பிரத்தியேக மருந்தைக் கொடுக்கிறார்கள்.
இந்த வகை மருந்து ஈஸ்ட்ரோஜன் சுரப்பை முற்றிலும் நிறுத்தக் கூடியது. இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் எலும்பு இழப்பு தீவிரமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கர்ப்பிணி பெண்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் !
ஃபிராக்சர் அபாயமும் இவர்களுக்கு சற்றே அதிகம் என்கின்றன அந்த ஆய்வுகள்.
எனவே, உங்களுக்கோ உங்களை சார்ந்த யாருக்கோ மார்பக புற்று நோய் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக எலும்புகளின் ஆரோக்கியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள்.
புற்றுநோய் சிகிச்சைகள் எலும்புகளை பாதிக்காமல் இருக்க மருத்துவர் உங்களுக்கு பிரத்யேக சிகிச்சைகளை பரிந்துரைப்பார்.
புற்றுநோய் சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது முறையான உடற்பயிற்சி, சரிவிகித உணவு போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும்.
தலைவலி போய் காது வலி வந்தது என்ற பழமொழிக்கேற்ப புற்று நோய்க்கான சிகிச்சைகளில் எலும்புகளின் ஆரோக்கியத்தை கோட்டை விட்டு விடாதீர்கள்.
நன்றி குங்குமம் டாக்டர்
Thanks for Your Comments