நிறம் மாறிய உப்பு சோடா ஏரி எனப்படும் பழமையான லோனார் ஏரி !

0

லோனார் பள்ளத்தாக்கு ஏரி அல்லது லோனார் ஏரி (Lonar crater lake) என்பது, மகாராஷ்டிராவின் புல்டானா மாவட்டத்தில் லோனாரில் அமைந்த தேசிய புவியியல் நினைவுச்சின்னம் ஆகும். நிறம் மாறிய உப்பு சோடா ஏரி எனப்படும் பழமையான லோனார் ஏரி !

இது உப்பு சோடா ஏரி ஆகும். 8 கிமீ (5 மைல்) உயரத்திற்கு மேல் சுற்றளவு கொண்ட ஒரு ஓவல் வடிவத்தை கொண்டிருக்கும் ஒரு சிறிய மலைத் தொடர். 

சுமார் 4.8 கிமீ (மூன்று மைல்கள்) சுற்றளவைக் கொண்டுள்ள ஏரி கரையோரத்திலிருந்தே, விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

அரிதானப் பழங்களின் மருத்துவ குணங்கள் !

இந்த லோனார் ஏரியின் நீர் இதற்கு முன்பு பச்சை நிறத்திலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியின் நீர் இப்பொழுது இளஞ்சிவப்பு, அதாவது பிங்க் நிறமாக மாற்றியுள்ளது. 

இந்த செய்தி  சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நிறம் மாற உண்மையான காரணம் இது தான்.

சிறுகோள் மோதலால் உருவான பள்ளம்

சிறுகோள் மோதலால் உருவான பள்ளம்

லோனார் பள்ளம் என்பது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தின் போது பூமியின் தாக்கத்துடன் ஒரு சிறுகோள் மோதலால் உருவாக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

லோனார் பள்ளம் என்றும் அழைக்கப்படும் இந்த 113 ஹெக்டேர் அளவு கொண்ட லோனார் ஏரி இந்தியாவின் ஒரு முக்கியமான தனித்துவமான புவியியல் தளம் என்பது பலருக்கும் தெரியப்படாத உண்மை.

தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னம்

தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னம்

பிரிட்டிஷ் அதிகாரி சி.ஜே.இ அலெக்சாண்டரால் லோனார் ஏரி முதல் முதலில் 1823 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டது, 

பின்னர் இந்த ஏரி 1979 ஆம் ஆண்டில் இது ஒரு தனித்துவமான புவியியல் தளமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னம் என்ற அடையாளத்தையும் பெற்றது.

நிறம் மாறிய லோனார் ஏரி

நிறம் மாறிய லோனார் ஏரி

புல்தானாவில் உள்ள மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற லோனார் பள்ளம் ஏரியின் நீர் மர்மமான முறையில் அதன் நிறத்தை பிங்க் நிறமாக மாற்றியுள்ளது, 

இதனால் புதிய கோட்பாடுகளையும், சந்தேகங்களையும் இந்த சம்பவம் இந்தியர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. ஏரியின் நீரின் நிறத்தில் ஏற்பட்ட மாற்றம், சராசரியாக சுமார் 1.2 கி.மீ. விதத்திற்கு உருவாக்கியுள்ளது.

பச்சை நிறத்தில் இருந்து பிங்க் நிறமாக மாறியது

பச்சை நிறத்தில் இருந்து பிங்க் நிறமாக மாறியது

இந்திய வன அதிகாரிகளையும், விஞ்ஞானிகளையும் இந்த சம்பவம் சற்று குழப்பமடையச் செய்துள்ளது. 

ஏனெனில், சாதாரண நாட்களில் லோனார் ஏரியின் நீர் எப்பொழுதும் பச்சை நிறத்தில் மட்டும் தான் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முட்டை உண்பதால் சர்க்கரை நோய் உண்டாகுமா?

இருப்பினும், லோனார் ஏரியின் இந்த நிற மாற்றம் சம்பவம் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது என்றும், இது முதல் முறை அல்ல என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். 

ஆனால், இந்த முறை பிங்க் நிறமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளனர்.

இது தான் காரணமா?

நிறம் மாற இது தான் காரணமா?

தேசிய புவி-பாரம்பரிய நினைவுச் சின்னமாக விளங்கும் இந்த ஏரியில் உள்ள நீர் சலைன் நீர் என்றும், இதன் பிஹெச் (PH) அளவு 10.5 இருக்கும் என்றும்,

லோனார் ஏரி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் கஜனன் காரத் தெரிவித்துள்ளார். 

கோலா குளிர்பானங்களை குடிப்பதால் என்னாகும்?

சலைன் வாட்டர் என்பது உப்பு நீர் ஆகும். அதே போல், இந்த நீர்நிலைகளில் அதிகளவில் பாசிகள் உள்ளது. இந்த நிற மாற்றத்திற்கு உப்புத்தன்மை மற்றும் பாசிகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விங்ஞானிகள் கொடுத்த விளக்கம்

விங்ஞானிகள் கொடுத்த விளக்கம்

லோனார் ஏரியின் நீர் மேற்பரப்பில் ஒரு மீட்டருக்குக் கீழே ஆக்ஸிஜன் அளவு சுத்தமாக இல்லை. லோனார் ஏரிக்கு ஏற்றார் போல ஈரானில் ஒரு ஏரிக்கும் இதே ஒற்றுமை இருக்கிறது. 

ஈரானில் உள்ள ஏரியின் நீரும் லோனார் ஏரியின் நீரைப் போல பிங்க் நிறத்தில் காணப்படுகிறது. 

இதற்கான உண்மை காரணம் இந்த நீரில் அதிமாக உப்புத்தன்மை உள்ளதால், நீரின் நிறம் பிங்க் நிறத்தில் தோற்றம் அளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அப்படியானால் லோனார் ஏரியின் நிற மாற்றத்திற்கும் இதுதான் காரணமா?

நீரின் அளவு குறைந்து விட்டது

நீரின் அளவு குறைந்து விட்டது

இந்த கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்வதற்கு, வனத்துறையினர் நீர் மாதிரி சேகரித்து ஏரியின் நிறம் மாறியதன் காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர். 

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது லோனார் ஏரியின் நீரின் அளவு தற்போது குறைவாக உள்ளது என்றும், 

உலகில் எங்கெல்லாம் நத்தை உணவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது?

மகாராஷ்டிரா சுற்று வட்டாரத்தில் போதிய அளவு மழை இல்லாததால் ஏரியில் புதிய தண்ணீர் தேக்கம் ஏற்படவில்லை என்று ஏரி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் கஜனன் காரத் தெரிவித்துள்ளார்.

உப்புத்தன்மை

உப்புத்தன்மை

மழை இல்லாத காரணத்தினால் குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே ஏரியில் உள்ளது. நீரின் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக உப்புத்தன்மை மற்றும் பாசிகளின் இயல்புநிலை மாற்றம் ஏற்படக்கூடும், 

இதனால், ஏரியின் நீரின் நிற மாற்றம் நேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. நீரின் நிறம் மாறியது இது முதல் முறை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுவும் கூட காரணம்

இதுவும் கூட காரணம்

அவுரங்காபாத்தின் டாக்டர் புவாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக் கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் டாக்டர் மதன் சூர்யவன்ஷி கூறுகையில், 

நரை முடி கருமையாக மீசையில் உள்ள இளநரை போக்க இதை பயன்படுத்துங்கள் !

ஊரடங்கு கால கட்டத்தின் போது, லோனார் ஏரியின் நீர்நிலை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் நிலையாக இருந்த காரணத்தினால் கூட ​​இந்த மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கக் கூடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

டெக்கான் பீட பூமி

டெக்கான் பீட பூமி

சுமார் 383 ஹெக்டேர் அளவு கொண்ட லோனார் வனவிலங்கு சரணாலயத்தின் பகுதியில் தான் இந்த ஓவல் வடிவ லோனார் ஏரி அமைத்துள்ளது, இது டெக்கான் பீட பூமியின் ஒரு பகுதியாக ஜூன் 8, 2000 அன்று அறிவிக்கப்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings