தெலுங்கில் ‘மாஸ்டர்’ படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. அதை முன்னிட்டு, விஜய்யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து உள்ளார் அந்த படத்தின் விநியோகஸ்தர்.
இதை ‘மாஸ்டர்’. சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். இதன் படபிடிப்பு முடிந்து வெளியாகும் சமயத்தில், கொரோனா பரவல் அதிகமானதால், இதன் வெளியீடு தள்ளிப் போனது.
அதோடு திரையரங்குகளும் மூடப்பட்டது. இதையடுத்து நவம்பர் 10-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்தது.
பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது.
இதனால் விநியோகஸ்தர்கள் அனைவருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் வரும் வாரம் அனைவருமே லாபத்தை ஈட்டிவிடுவார்கள் எனத் தெரிகிறது.
இறால் குடமிளகாய் வறுவல் செய்முறை !
‘மாஸ்டர்’ படத்தின் தெலுங்கு உரிமையை மகேஷ் கொனேரு வாங்கி வெளியிட்டார். லாபமடைந்ததை முன்னிட்டு சென்னை வந்து படக்குழுவினரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதில் விஜய்யைச் சந்தித்துப் பேசியது குறித்து மகேஷ் கொனேரு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
தெலுங்கு மாநிலங்களில் திரைப்பட ரசிகர்களால் காட்டப் பட்டிருக்கும் அன்பைப் பார்த்து விஜய் சார் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !
தெலுங்கு ரசிகர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார். மாஸ்டர் தெலுங்கு பதிப்பை எங்களுக்குத் தந்ததற்கு நன்றி செவன் ஸ்க்ரீன் லலித் மற்றும் ஜெகதீஷ் இவ்வாறு மகேஷ் கொனேரு தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments