சுன்னத் என்பதன் அறிவியல் காரணம் தெரியுமா? உங்களுக்கு... !

0

நல்ல கேள்வி கேட்டு இருக்கிறீர்கள்.. தொற்று நோய்கள் இல்லாமல் இருக்கும் போது சுன்னத் எனப்படும் CIRCUMCISION அறுவை சிகிச்சை பெற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை .

சுன்னத் என்பதன் அறிவியல் காரணம் தெரியுமா? உங்களுக்கு... !

ஆணுறுப்பு மேல் மூடியிருக்கும் மேல் தோலை prepuce or prepucial skin என்று சொல்கிறோம்.. இஸ்லாமியர்களும்.. யூதர்களும் ஆண் குழந்தையின் ஆரம்ப குழந்தை பருவத்திலேயே 

அந்த மேல் தோலை அகற்றும் சுன்னத் முறையை தங்களது மதநம்பிக்கையால் செய்து கொள்கிறார்கள்.

வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் ஆட்டுக்குடல் குழம்பு செய்வது எப்படி?

மருத்துவ அடிப்படையில்.. சுன்னத் அறுவை சிகிச்சை பெற்று கொள்வது.. பெரும்பான்மையாக நான்கு விதமான காரணங்கள் உள்ளன..

1 . முன்தோல் குறுக்கம் - phimosis..

2 . முன்தோல் குறுக்க இறுக்கம் - Para phimosis..

3 . தொடர்புடைய பாலியல் நோய்கள் - Related sexually transmitted diseases..

4 . தொடர்புடைய சிறுநீர் பாதை நோய்கள் - Related urinary tract diseases..

இனி விரிவாக காண்போம்....

1 . முன்தோல் குறுக்கம் - PHIMOSIS.. 

குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்… ஆணுறுப்பில்.. அதிகப்படியான மேல்தோல் இருக்கும்.. சிறுநீர் அவற்றில்.. தேங்கி நிற்கும்.. 

சுன்னத் என்பதன் அறிவியல் காரணம் தெரியுமா? உங்களுக்கு... !

அதனால் ஏற்படும் இன்பக்ஃஷன்.. குழந்தைக்கு சிறுநீர் கழிக்கும் போது வலி.. எரிச்சல்.. ரத்தக்கசிவு..அடிவயிற்றில் வலி மற்றும் குளிர் காய்ச்சல் ஏற்படும்.. 

ஒவ்வொரு முறையும் மேல் தோல் சிறுநீர் தேங்குவதால் பலூனை போல உப்பும் நிலை காணப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் சிறுநீர் இன்பக்ஃஷன் களுக்கு circumcision surgery செய்து கொள்ள வேண்டும்..

2 . முன்தோல் குறுக்க இறுக்கம் - PARAPHIMOSIS.. 

மேலே ஏற்றி விடப்பட்ட அதிக தடிமனாகிப் போன மேல்தோல்…. கீழே இறக்க முடியாமல் வீங்கி போய்.. வலியோடு வருவார்கள்.. 

உடல் எடையை குறைக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்?

சரிவர செரய்யப்படாத சுன்னத்.. இந்த வகை தொந்திரவுகளை கொடுக்கும்.. பின்னர் வயதான ஆண்களுக்கு சர்க்கரை நோய் காரணமாக இன்ஃபெக்ஷன் காரணம்.. 

மேல் தோல் தடிமனாகி மாட்டிக்கொண்டு அதிக வலியை ஏற்படுத்தும்..

3 . தொடர்புடைய பாலியல் நோய்கள் - SEXUALLY TRANSMITTED DISEASES..

ஆண்களுக்கு ஏற்படும் பால்வினை நோய் காரணமாக ஏற்படும் திரவங்கள்.. சீழ்கள்.. மேல் தோலில் தேங்கி.. இன சேர்க்கையில் உங்கள் துணைக்கு தொந்தரவு ஏற்படும். 

அதிக அளவில் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு, கர்பப்பை வாய் புண் மற்றும் இன்பக்ஃஷன்.. அதன் உடன் காணப்படும் எரிச்சல் அரிப்பு போன்றவை 

அவர்களது துணைவர்கள் மூலமாக மட்டுமே உண்டாகிறது.. அந்த வகையில் ஆண்களுக்கு மேல் தோலை அகற்ற வேண்டும்..

4 . தொடர்புடைய சிறுநீர் பாதை நோய்கள் - URINARY TRACT DISEASES.. 

வயதான காலத்தில் ஆண்களுக்கு ஏற்படும் BPH.. benign prostate hypertrophy.. என்ற ப்ராஸ்டேட் வீக்கம் காரணமாக.. ப்ராஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யும் (TURP.. TRANS URETHRAL RESECTION OF PROSTATE) போது… 

சுன்னத் என்பதன் அறிவியல் காரணம் தெரியுமா? உங்களுக்கு... !

சிறுநீர் தேங்கி நிற்கும் தொந்தரவு அதிகமாக இருக்கும் போது ஏற்படும் தொற்றால் circumcisions சேர்த்து செய்யப்படும்.. 

அல்லது ஆணுறுப்பு புற்றுநோய் carcinoma penis.. உண்டாகும் பட்சத்தில்.. அதன் சிகிச்சை முறைகளில் ஒரு பாகமாக.. circumcision சேர்த்து செய்ய வேண்டும்…

உங்கள் தங்க நகைகள் தொலைந்து போகாமல் இருக்க !

இது போன்ற தொந்திரவுகள் எதுவும் இல்லை என்றால் சுன்னத் என்ற circumcision surgery செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை… என்பது குறிப்பிடத்தக்கது… 

எப்படி இருந்தாலும் சுன்னத என்ற மேல் தோல் நீக்கும் முறை செய்வது நன்மையே தரும்.

மருத்துவ காரணம் இன்றி தேவை யில்லாமல் செய்யப்படும் சுன்னத்.. male genital mutilation MGM என்ற பெயரில் குற்றமாகப் சில நாடுகளில் பார்க்கப்படுகிறது..

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings