விபத்தில் அடிபட்டவர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது? ஏன்?

0

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனே தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று எந்த மருத்துவ விதியும் இல்லை. தண்ணீர் கொடுப்பதால் யாரும் மரணம் அடையவும் மாட்டார்கள். 

விபத்தில் அடிபட்டவர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது
ஆனால் விதிவிலக்குகள் உண்டு. விபத்து என்று நீங்கள் சொல்வதை சாலை விபத்து என்று எடுத்துக் கொண்டு பதில் தருகிறேன். 

சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணங்கள் பெரும்பாலும் அதிக இரத்த சேதத்தினாலேயே ஏற்படுகின்றன. இரத்தம் வெளியேறுவது வெளிக் காயங்களாலும் நிகழலாம், வெளியே தெரியாத உள் காயங்களாலும் நிகழலாம்.

முழங்கையை இடித்துக் கொள்ளும் போது ஷாக் அடிக்கும் உணர்வு வருவது ஏன்? 

ஒருவர் விபத்தில் காயமுற்றுக் கிடக்கும் நிலையில் அருகில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்? விபத்தில் காயம் அடைந்தவர்களை (அவர் இறந்திருந்தாலும்) அருகில் இருப்பவர்கள் தாராளமாகத் தொட்டுத் தூக்கலாம். 

காவல்துறையினரோ மருத்துவர்களோ நிச்சயம் ஆட்சேபிக்க மாட்டார்கள். முதலில், அடிபட்ட நபர் சுயநினைவோடு இருக்கிறாரா என்று பாருங்கள். 

நினைவு இல்லாமல் மயக்கத்தில் இருந்தால் அவருக்கு வாய் வழியாக தண்ணீரோ உணவோ தரக்கூடாது. கொடுத்தால் அது அவருடைய மூச்சுப் பாதைக்குள் சென்று மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. 

அவரை சற்று நேராகப் படுக்க வைத்து மூச்சு சீராக இருக்கிறதா என்று பாருங்கள். உங்களுக்கு நாடித்துடிப்பு பார்க்க தெரிந்தால் கை மணிக்கட்டில் தொட்டு நாடித்துடிப்பு இருக்கிறதா என்று பாருங்கள். 

நாடித்துடிப்பு இருந்தால் மனிதர் உயிருடன் இருக்கிறார் என்று அர்த்தம். இல்லையென்றாலும் உயிருடன் இருக்கிற வாய்ப்பு உண்டு 

ஆனால் இரத்தக்கொதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறதென்று அர்த்தம். கை, கால் போன்றவற்றில் வீக்கமோ அல்லது காயமோ இருக்கிறதா என்று கவனியுங்கள். 

அப்படி இருந்தால் அந்த பாகத்தை அசைக்காமல் அவரை மருத்துவமனைக்கு அனுப்ப முயலுங்கள். வயிறு, நெஞ்சு போன்ற இடங்களில் கை வைத்து ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று கவனியுங்கள். 

வயிறு கனமாகவும் மார்புப்பகுதி குழைவாகவும் இருந்தால் ஆபத்து (பொதுவாக எல்லோர்க்கும் வயிறு குழைவாகவும் மார்புப்பகுதி விலா எலும்புகள் இருப்பதால் விரைப்பாகவும் இருக்கும்).

எப்பொழுது எல்லாம் விபத்தில் அடிபட்டவர்களுக்கு தண்ணீர் தரக்கூடாது?
சுய நினைவு இல்லாமல் இருந்தால்

மூச்சு சீராக இல்லாமல் இருந்தால்

வயிற்றில் பலத்த அடிபட்டு இருந்தால்

தலையில் பலத்த காயங்கள் இருந்தால்

வலிப்பு, வாந்தி வந்திருந்தால்.

இது போன்ற அறிகுறிகள் இல்லாத எல்லோருக்கும் தாராளமாக தண்ணீர் கொடுக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings