பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன.
பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி, சில எலிகளையும் பாடம் செய்து எகிப்தியர்கள் புதைத்துள்ளனர்.
ஏன் ரயில் பெட்டியில் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கிறது?
நாய்கள் சாப்பிட்ட எலும்புகளை புதைக்கின்ற பழக்கத்தை உடையவை, பூனைகள் தன் மலத்தை புதைக்கும் பழக்கம் உடையன.
பூனை கழிவுகளை மறைப்பது அதன் இயற்கையான உள்ளுணர்வு, ஆனால் இந்த பழக்கம் பூனைகள் தூய்மையாக இருப்பதற்காக மட்டுமல்ல.
பூனைகளின் மலம் எல்லாமே நமக்கு ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் பூனை தங்கள் கழிவுகளை இன்னொரு பூனையின் கழிவுடன் வேறுபடுத்தி சொல்ல இயலும்,
பெரோமோன்கள் எனப்படும் தனித்துவமான ரசாயன வாசனை குறிப்பான்கள் இவற்றிற்கு காரணமாகும், அவை பூனையின் சிறுநீர் மற்றும் மலத்தில் உள்ளன.
சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் ஜாகுவார் போன்றவை விலங்குகள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரிமை கோர விரும்புகின்றன என்பதற்கான சமிக்ஞைக்கான வழியாக அவர்களின் மலத்தை புதைப்பதில்லை.
சுன்னத என்பதன் அறிவியல் காரணம் தெரியுமா? உங்களுக்கு... !
இந்த வரிசையில் தலைகனம் பிடித்த பாந்தேரா இனத்தைச் சேர்ந்த ஆதிக்கம் செலுத்தும் பூனைகளும் அடங்கும் அவை அவற்றின் எல்லைக்கு போராடுவதால் மலத்தை புதைப்பதில்லை.
மேலும் மற்ற சிறிய, பலவீனமான அல்லது அதிக அடக்கமான காட்டு பூனைகள் ஆதிக்கம் செலுத்தும் பூனைகளுக்கு சவாலாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாக தங்கள் மலத்தை புதைக்கின்றன.
இந்த காட்டு பூனைகள் வேட்டையாடு பவர்களிடமிருந்து தங்களுக்கு அல்லது பூனைக் குட்டிகளின் கூடுக்கு தேவையற்ற கவனத்தை ஈர்ப்பதைத் தவிர்ப்பதற்காக தங்கள் கழிவுகளை மறைக்கும்.
உங்கள் வீட்டு பூனை மலத்தை புதைக்கும் பழக்கம் உள்ளது என்றால் அது உங்களை வீட்டின் ஆதிக்கம் செலுத்தும் மனிதராக கருதி தன்னை மறைத்து கொள்கிறது என அர்த்தம்.
தலைமுடிக்கு அழகே கருப்பு நிறம் தான் !
"ஒரு இடையூறு இல்லாத வீட்டில், அனைத்து வீட்டு பூனைகளும் தங்களை தங்கள் மனித உரிமையாளர்களுக்கு அடி பணிந்தவர்களாகவே பார்க்கின்றன,
எனவே சாதாரண சூழ்நிலைகளில், அனைத்து வீட்டு பூனைகளும் குப்பைத் தட்டுக்களைப் பயன்படுத்துகின்றன அல்லது
தோட்டத்தில் மலம் புதைக்கின்றன" என்று விலங்கியல் மற்றும் நெறிமுறை நிபுணர் டெஸ்மண்ட் மோரிஸ் தனது "கேட்லார்" புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பூனைகள் மட்டும் தங்கள் கழிவுகளை புதைப்பதில்லை, வேட்டையாடுபவர்களிடம் தப்பிக்க, பிராந்திய மோதல்களை தடுக்க அர்மாடில்லோஸ், வூட் சக்ஸ், மின்க்ஸ் போன்றவைகளும் தங்கள் மலத்தை புதைக்கின்றன.
நாம யாரு வம்பு தும்புக்கும் போரது இல்லை என வாழ்பவர்கள் பூனைகள்
Thanks for Your Comments