இந்தியாவில் உள்ள அதிகளவு மக்கள் பெரும்பாலும் பேருந்துகளுக்கு அடுத்தப்படியாக ரயில் பயணங்களை தான் தேர்வு செய்கின்றனர்.
கிராமத்தில் உள்ளவர்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் சென்று இருக்காமல் வாய்ப்புள்ளது.
திருஷ்டி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
ரயில் போக்குவரத்து ஒரு தவிர்க்க முடியாத ஒரு போக்குவரத்து. இதற்கு முக்கிய காரணம் குறைவான பயணக்கட்டணம், பாதுகாப்பான பயணம், சரியான நேரத்திற்கு சென்று விடலாம் என்பதாகும்.
தற்போது பேருந்துக் கட்டண உயர்வால் ரயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. அதுவும் பண்டிகை நாட்களில் அடிதடியாக இருக்கும்.
சிறிய வயது முதல் சலிக்காத விஷயங்கள் ஏராளமாக உள்ளன, அதில் இந்த ரயில் பயணங்களும் ஒன்று.
இந்தியாவில் 1853-ம் ஆண்டு தான் ரயில்வே சேவை துவங்கப்பட்டது, பின்பு இந்த ரயில் சேவை 1951-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது.
பெண் ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம் !
பொதுவாக ரயிலில் பயணித்திருப்பவர்களுக்குக் கூட ரயிலில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள், அல்லது குறியீடுகளுக்காக அர்த்தம் தெரியாமல் இருக்கும்.
அப்படியான ஒரு விஷயம் தான் ரயில் பெட்டிகளில் கடைசியில் ஜன்னலுக்கு மேல் உள்ள மஞ்சள் நிற கோடுகள், இந்த கோடுகள் எதைக் குறிக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறலாம்.
இந்தியாவில் விரைவு வண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளை கொண்டிருக்கும்.
பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக இருக்கும். ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளாக இருக்கும்.
இந்த கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என அர்த்தம், முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது.
குளிர்ச்சி தரும் ஜிகர்தண்டா செய்வது எப்படி?
எனவே ரயில்வே நிலையத்தில் பயணிகள் முன்பதிவில்லாத பெட்டியை எளிதாக கண்டுபிடிக்கவே இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல் :-
நீலம் - தொடர் வண்டியின் நடுவே உள்ள முன்பதிவு செய்யாத பெட்டிகள்
மஞ்சள் - மாற்றுத் திறாளிகளுக்கு மற்றும் கடைசி பெட்டி
பச்சை - மகளிர் மட்டும்
சிவப்பு - முதல் வகுப்பு
Thanks for Your Comments