இனி வாகனங்களில் இருந்து எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் !

0

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்த முதல்வர் யோகி ஆத்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இனி வாகனங்களில் இருந்து எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் !

அம்மாநிலத்தின் பெரிய நகரங்களில், காரில் போகும் நபர்கள் ரோட்டில் குப்பைகளை போட்டாலோ அல்லது 

எச்சில் துப்பினாலோ ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டு வருவதற்கு உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. 

எனவே வெகு விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புவது மற்றும் குப்பை போடுவது போன்ற காரியங்களை செய்வதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் சுற்றுப்புற தூய்மை பாதிக்கப்படுகிறது. 

எனவே தூய்மையை பேணி காக்கும் விதமாக தான், ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புபவர்கள் மற்றும் குப்பை போடுபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கும் திட்டத்தை உத்தர பிரதேச அரசு முன்னெடுத்துள்ளது. 

இதன் மூலம் வருங்காலங்களில் இந்த தவறை மக்கள் செய்ய மாட்டார்கள் என உத்தர பிரதேச அரசு நம்புகிறது.

மின்சார வாகனத் தொழிலுக்கு உதவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சோதனை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றிற்காக எதிர்காலத்தில் ஒரு 'சிறந்த மையத்தை' அமைக்க உ.பி அரசு முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings