ரேஷன் அட்டைக்கு அரிசிக்கு பதிலாக 3000 ரூபாய் பணம் வழங்கப்படும் என மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச ரேஷன் அரிசிக்கு பதிலாக 3000 ரூபாய் பணம் வழங்கப்படும்.
மேலும் இது ஐந்து மாதங்களுக்கு என்று அந்த மாநிலத்தின் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்திற்காக ரூ.52.84 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கிறது.
இது பற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சிவப்பு ரேஷன் அட்டை தாரர்களுக்கு 5 மாதத்திற்கான அரிசிக்கு
ஈடான அட்டை ஒன்றுக்கு 3 ஆயிரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதனை கவர்னர் கிரண் பேடிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் !
அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட்ட இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ரேஷன் அட்டை தாரர்களின் வங்கி கணக்கில் இந்த பணம் செலுத்தப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Thanks for Your Comments