சனிக்கிழமை என்றாலே சந்தோஷத்தில் துள்ளுவது குழந்தைகள் மட்டும் அல்ல, பெரியவர்களும் தான். ஏனெனில் அடுத்த நாள் விடுமுறை என்பதால்.
ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒரு ஹேப்பியான செய்தி. மத்திய அரசு அலுவல் நாட்கள் தொடர்பாக, புதிய நெறிமுறைகளை அமல்படுத்த உள்ளது.
ஒவ்வாமை (அலர்ஜி) வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
இந்த நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், ஊழியர்கள் வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும் அதாவது, வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை.
இது தொடர்பாக மாற்றம் கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இப்போது அனைத்து நிறுவனங்களிலும் தினமும் 8 மணி நேரம் என்ற வகையில் வாரத்தில் 6 நாட்கள் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 6 x 8 = 48 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
ஆனால் புதிய விதியின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும் என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா கூறியுள்ளார்.
ஊழியர் வாரத்தில் 5 நாட்கள் அல்லது 6 நாட்கள் வேலை செய்யத் தேவையில்லை மேலும் நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை விரட்டியடிக்க இந்தியா செய்த வித்தை என்னனு தெரியுமா?
எனினும் நாங்கள் ஊழியர்களையோ அல்லது முதலாளிகளையோ கட்டாயப் படுத்தவில்லை. இது மாறி வரும் கலாசாரத்துக்கு ஏற்ப இருக்கும் என்றும் சந்திரா கூறியுள்ளார்.
அதோடு இந்த விதிமுறைகள் தொழிலாளர் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும் இந்த புதிய விதிகள் அமல்படுத்தபட்டவுடன் முதலாளிகள்,
தங்கள் ஊழியர்களின் ஏற்பாட்டை ஒப்புக் கொண்டால், வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து நாள் வேலை திட்டத்திற்கு மாற அரசின் அனுமதி தேவையில்லை.
வாரத்தில் நான்கு நாட்களை ஊழியர்கள் தேர்வு செய்தால், அடுத்த வார இடைவெளி மூன்று நாட்கள் இருக்க வேண்டும்.
இந்த புதிய விதியால், பல ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் கூடுதலாக கிடைக்கும். வேலை அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கும் வாய்ப்பு உள்ளதாக, நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரதமர் மோடிக்கு சவால் விட்ட இந்த லேடி பரபரப்பு விடியோ
ஆக இது எந்தளவுக்கு சாத்தியமான ஒன்று என்று அமலுக்கு வரும்போது தான் தெரியவரும். எப்படி இருந்தாலும் வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை என்றால் செம ஜாய் தான்.
Thanks for Your Comments