டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
அரசு எவ்வளவோ முயற்சி செய்தும் விவசாயிகள் போராட்டத்திலிருந்து பின் வாங்குவதாக இல்லை.
குடியரசு தினத்தன்று நடந்த கலவரத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று கூறும் விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ட்வீட் செய்ய அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவிற்கு, பிரபல நிறுவனங்கள் மூலம் ரூ .19 கோடி வழங்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விப்பிள் நோய்க்கான சிகிச்சைகள் என்ன?
கனடாவை மையாக கொண்டு "பொயட்டிக் நீதி அறக்கட்டளை (PJF) என்ற அமைப்பு, சட்ட விரோத போராட்டங்களுக்கு ஆதரவாக “உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கி நடத்தி வருவதாக 'தி பிரிண்ட் செய்திகள்' தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், காலிஸ்தானி இயக்கத்தை சேர்ந்த மோ தலிவால் இயக்குநராக உள்ள PR நிறுவனமான ஸ்கைரோக்கெட் என்ற நிறுவனம்,
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பாப் ஸ்டார் ரிஹானாவுக்கு ட்வீட் செய்ய இந்திய மதிப்பில் சுமார் 19 கோடி ரூபாய் 2.5 மில்லியன் டாலர் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் உலக சீக்கிய அமைப்பின் இயக்குநர் அனிதா லால் மற்றும் கனேடிய எம்.பி. ஜக்மீத் சிங் போன்றவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தலைமுடியில் படியும் அழுக்கு மற்றும் நச்சுக்களை நீக்க எப்சம் உப்பு !
இதில், அனிதா லால் பொயட்டிக் நீதி அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார், இது கிரெட்டா தன்பெர்க் பகிர்ந்த ஆவணங்களில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக இந்திய உளவுத்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
Thanks for Your Comments