இனி ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

0

ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டுவதற்கே லைசென்ஸ் தேவைப்பட்டது. அப்போது லைசென்ஸ் இருந்தாலும் பயந்து, பயந்து ஓட்டினார்கள்!

இனி ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இப்போது பலபேர் லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிளே ஓட்டுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆபத்து வரும் வரை உணர மாட்டார்கள். 

ஏகப்பட்ட படிவங்களை நிரப்ப வேண்டும். கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டும்!’ என்று தாங்களாகவே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு, லைசென்ஸ க்கே விண்ணப்பிக் காமல் இருக்கிறார்கள். 

‘வழியில் போலீஸ் நிறுத்தினா, அம்பது ரூபா தந்தா மேட்டர் ஓவர்’ என்று தவறான நினைப்பில் இருப்பவர்களும் நிறைய.

பழகுநர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கு படிவம் 4&ஐ நிரப்பி விண்ண ப்பிக்க வேண்டும்.

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் படிவம் 5 இணைக்க வேண்டும். மேலும் சில ஆவணங்களை நாம் நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். 

இனி ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

ஆனால் இப்போது நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் RTO ஆபீசுக்கு செல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும்.

உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஹரியானா, மற்றும் டெல்லி என்.சி.ஆர் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம் பெரும் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், 

மார்ச் மாதத்திற்குள் ஓட்டுநர் உரிமம் (டி.எல்) மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் 

நாடு முழுவதும் மீதமுள்ள மாநிலங்களிலும் ஆன்லைனில் பெற சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களும் ஆன்லைன் முறைக்கு படிப்படியாக மாறும் எனவும் அதை பின்பற்றி, 

இனி ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
புதிய கற்பவர்களின் உரிமம் ( learners license), புதுப்பித்தல், நகல் ஓட்டுநர் உரிமம் மற்றும் தற்காலிக வாகன பதிவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 

தேவையான ஆவணங்களை பதிவேற்றி ஓட்டுநர் சோதனைகளுக்கு மட்டுமே ஆர்டிஓவைப் பார்க்க வேண்டும் என மோடி அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இதன் காரணமாக விஐபி எண்களைப் பதிவு செய்வதற்கான செயல்முறையும் எளிதாகி விடும் என தெரிவிக்க பட்டுள்ளது.

ஏற்கனவே உரிமத்தைப் பெறுவதற்கும் வாகனங்களை பதிவு செய்வதற்கும் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், டெல்லி-என்.சி.ஆர் போன்ற 

மாநிலங்கள் நடைமுறையில் மாற்றங்களைச் செய்துள்ள நிலையில் ஆஃப்லைனில் விண்ணப்பங்களை பெரும் மாநிலத்துக்கும் மார்ச் முதல் ஆன்லைன் சேவை செயல்படும்.

இந்நிலையில் learner license பெறுவதற்க்கான கட்டணங்களை டெபாசிட் செய்ய விண்ணப்பதாரர் சோதனைக்காக ஒரு ஸ்லாட்டை முன்பதிவு செய்வதற்கு 

இனி ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

முன் கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் பின் விண்ணப்பதாரர் சோதனைக்கு வர வேண்டிய நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்யலாம். 

மோட்டார் வாகன விதிகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்த அரசு ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகனம் தொடர்பான ஆவணங்களை இனி கையில் எடுத்து செல்ல தேவையில்லை எனவும் 

அதற்க்கு மாற்றாக அவைகளை அரசாங்க போர்ட்டல்கள், டிஜிலாக்கர் ஆகியவற்றில் சேமிக்க அனுமதித்தது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings