நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜகவின் கல்யாணராமன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திமுக. பொருளாளர் டி.ஆர்.பாலு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இன்று பொய், அவதூறு என்பதெல்லாம் மக்களால் ஒரு பாவமான செயலாகவே பார்க்கப்படுவதில்லை. சர்வ சாதாரணமாக அவதூறு கூறும் பழக்கம் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டுள்ளது.
சுன்னத் என்பதன் அறிவியல் காரணம் தெரியுமா? உங்களுக்கு... !
பொய்யான தகவல்களை மக்களிடையே கூறுவதும், அதை பேஸ்புக் போன்ற இணையதள ஊடகங்கள் மூலம் பரப்புவதும் பலருக்கும் அன்றாட பழக்கமாகி விட்டது.
பிற மனிதர்கள் மீது அவதூறு பரப்புவதை ஏதோ சாதாரண ஒன்றாகக் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் அது ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரணமானவை அல்ல.
மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் பேசியதைக் கண்டித்து
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது,
இதையடுத்து பாஜகவின் கல்யாணராமன் உட்பட 10 பேர் மேட்டுப்பாளைய போலீசாரால் கைது செய்யப்பட்டர்.
இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜகவின் கல்யாணராமன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திமுக.பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எப்சம் உப்பு என்பது என்ன? எவ்வாறு பயன்படுத்துவது?
தமிழகத்திலுள்ள மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் உள்ளிட்டோர் பேசி வருவதாகவும்
அவர்களுக்கு ஊக்கமும் அளித்து பாஜக. தலைமை காப்பாற்றி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மற்ற கட்சிகள் கண்டனம் தெரிவித்த பிறகு, தற்போது வெறும் கண்துடைப்பிற்காக மட்டும் அவர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துண்டுப் பிரசுரம் வழங்கிய மாணவி வளர்மதி குண்டர் சட்டத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து கருத்துச் சொன்னால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யும்
தமிழக காவல் துறை, மதவெறிப் பேச்சுக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் கல்யாணராமன் போன்றவர்களையோ கண்டு அஞ்சுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
நரம்பு தளர்ச்சி குணமடைய வைட்டமின் பி12 !
பாஜகவுக்கு எதிராக பொதுவாகக் கருத்தும் சொல்லும் நபர்கள் மீதும்கூட நடவடிக்கை எடுக்கும் அதிமுக அரசு, பாஜகவினரோ அல்லது
பாஜக ஆதரவு பெற்றவர்களோ தேசியக் கொடியை அவமதித்தாலும் உயர் நீதிமன்றத்தை அவமதித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய கல்யாணராமனை தாமதமாகக் கைது செய்தது மட்டும் போதாது என்றும்
அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
Thanks for Your Comments