உடல் பொசுங்கி, தலை மொட்டை அடித்து சிறுவன் கொலை நரபலியா? ஷாக் !

0

10 வயசு சிறுவனை மிக கொடூரமான முறையில் கொன்றுள்ளனர்..ஒரு வேளை துடிதுடிக்க கொன்றிருப்பதை பார்த்தால், சிறுவனை நரபலி தந்திருப்பார்களோ என்ற சந்தேகம் கிருஷ்ணகிரி போலீசாருக்கு எழுந்துள்ளது. 

உடல் பொசுங்கி, தலை மொட்டை அடித்து சிறுவன் கொலை  நரபலியா?
பர்கூர் அடுத்த கொட்லேட்டி கிராமத்தில் இருந்து உச்சன் கொல்லை செல்லும் வழியில் ஒரு மலைப்பகுதி உள்ளது. இதை மல்லேஸ்வரன் என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

இந்த மலையை சுற்றி உள்ள கிராம மக்கள் அந்த மலை அடிவாரத்திற்கு விறகு சேகரிப்பதற்காக அடிக்கடி செல்வது வழக்கம்.

அப்படித்தான், சம்பவத்தன்றும் அந்த பகுதி மக்கள் விறகு சேகரிக்க அந்த மலை அடிவாரத்திற்கு சென்றுள்ளனர். அங்கே 10 வயது சிறுவன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் சொல்ல போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு சென்றனர். 

அப்போது தான்  அந்த சிறுவனின் உடம்பெல்லாம் பிரம்பால் அடித்ததற்கான தடயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  

அவன் உடலில் ரத்த காயங்களும் ஓரிரு இடங்களில் சிவந்தும் இருந்தன. மேலும் தலை முழுவதுமாக மொட்டை அடிக்கப்பட்டு இருந்தது. அவன் வாயில் மிளகாய் பொடி திணிக்கப்பட்டிருந்தது. 

அவனது மார்பு, கை, கால்கள், என உடம்பின் மொத்த இடமும் நெருப்பால் சுடப்பட்டுள்ளது. இதை கண்டதும் சிறுவனை யாராவது கடத்தி நரபலி கொடுத்து இருப்பார்களா? 

அல்லது நெருப்பாலேயே அவனை பொசுக்கி கொன்றார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் சிறுவன் அந்த பகுதியை சேர்ந்தவன் இல்லை என்பதால், யாருக்கும் விவரம் தெரியவில்லை.

சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் !

எனவே இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை ஆரம்பித்தனர். 10 வயதில் யாராவது காணாமல் போய் உள்ளனரா என்று விசாரித்தனர். 

ஆனால், 2 நாளாக விசாரணை செய்ததில் இந்த கொலையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. 

எனவே, தொழிலதிபர் வீட்டுப் பிள்ளையாக இருப்பானோ, யாராவது பணத்துக்காக கடத்தி சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்து இருப்பார்களோ என்று அடுத்த சந்தேகம் போலீசாருக்கு எழுந்து உள்ளது.

அதனால் இப்போதைக்கு 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு குழுவினர் ஆந்திரா மாநில எல்லையிலும், மற்றொரு குழுவினர் திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை தவிர சிறுவனின் போட்டோவை எல்லா ஸ்டேஷனுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அநேகமாக சிறுவனை பாரத்தால் ஆந்திராவை சேர்ந்தவன் போல தெரிகிறானாம். 

எப்படியும் ஓரிரு நாளில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஆந்திராவில் இப்படித்தான், பெற்ற பிள்ளைகளை நரபலி கொடுத்த அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை. 

இப்போது இன்னொரு நரபலி என்பது உறுதியானால், இது சம்பந்தமாக ஏதாவது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். 

படித்த முட்டாள்கள், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசைக்காரர்கள், மூடத்தனத்தில் ஊறிப்போனவர் களுக்கு எல்லாம், 

முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க ஆசை - அமிதாப் பச்சன் !

ஒன்றுமறியாத பச்சை குழந்தைகளை அநியாயத்துக்கு பலி கொடுக்க முடியாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது. ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings