முதன் முறையாக இந்தியாவில் நீருக்கு அடியில் திருமணம் செய்த தம்பதிகள். திங்கட்கிழமை அன்று காலையில் சென்னையில் தனித்துவமான திருமணம் ஒன்று நடந்தது.
மணமகன் 12 ஆண்டுகளாக ஸ்கூபா டைவிங் என்னும் நீச்சல் முறையை செய்துக் கொண்டிருந்தார்.
ஆணின் பேன்ட் ஜிப்பை.. சிறுமி கையை பிடிப்பது.. பெண் நீதிபதி சர்ச்சை !
இதனால் அவர் மணமகளுக்கு இது குறித்து திருமணத்திற்கு முந்தைய மாதம் முதலே பயிற்சி அளித்து வந்தார். மணமகனின் குடும்பத்தாரே இந்த நீருக்கடியில் திருமணத்தை நடத்த பரிந்துரைத்ததாக அவர் கூறுகிறார்.
இது ஒரு பாரம்பரிய திருமண விழாவாக நீருக்கடியில் அமைந்தது. நாங்கள் காலையில் நல்ல நேரத்தில் நீராடி மாலைகளை எங்களுக்குள் மாற்றிக் கொண்டோம்.
ஒரு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்ற பிறகு, சில ஸ்கூபா டைவிங்களை செய்த பின்பும் போதுமான அளவு நம்பிக்கையுடன் நான் இன்று திருமணத்தில் டைவிங்கை செய்தேன்.
முந்திரியால் செய்யப்படும் காஜூ கத்லி ஸ்வீட் செய்வது எப்படி?
முதல் முறை கடலின் அடி ஆழத்திற்கு சென்ற போது எனக்கு மிகவும் அருகாமையில் மீன்கள் நீந்துவதை கண்டேன். என் வாழ்நாளில் சிறந்த அனுபவமாக இதை நான் கருதுகிறேன் என்று மணமகள் ஸ்வேதா கூறினார்.
இந்த நீருக்கடியில் நடந்த திருமணம் குறித்த வீடியோக்கள் பேஸ்புக்கில் பரவி வருகின்றன. இவை மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
தனித்துவமான முறையில் நீருக்கடியில் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்ததாக கூறியுள்ளனர்.
எப்சம் உப்பில் செய்யக்கூடிய ஃபேஸ் மாஸ்க் !
தண்ணீருக்கு அடியில் நாங்கள் அதிகமாக முக கவசங்களை கண்டறிந்தோம் அது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இது குறித்த விழிப்புணர்வை நாங்கள் பரப்ப விரும்பினோம்.
எனவே எங்கள் திருமணத்தை அதற்கான சந்தர்ப்பமாக தேர்ந்தெடுத்தோம் என்று சின்னதுரை கூறினார்.
Thanks for Your Comments